பதுளை பகுதியில் இதுவரையில் கொரோனா தொற்றால் 176 பேர் உயிரிழப்பு

Published By: J.G.Stephan

16 Aug, 2021 | 04:33 PM
image

பதுளையின் 15 பிரதேச செயலகங்களில் கொவிட்19 தொற்றினால் சிகிச்சை பயனின்றி 16-08-2021 வரையில் மொத்தமாக 176 பேர் உயிரிழந்துள்ளனர். 12,922 பேர் இதுவரையில் கொவிட்19 தொற்று உறுதியாகியுள்ளனர். 4,044 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பதுளை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் செயலக அனுமதியுடன், பதுளை மாவட்ட செயலாளர் புள்ளி விபரப்பட்டியலை வெளியிட்டுள்ளார்.

பதுளை, பண்டாரவளை, எல்ல, ஹல்துமுள்ளை, ஹப்புத்தளை, கந்தகெட்டிய, லுணுகலை, மகியங்கனை, மீகாகியுல, பசறை, ரிதிமாலியத்த, சொரணாதொட்ட, ஊவா – பரணகம, வெலிமடை, ஹாலி-எலை ஆகிய 15 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தே, மேற்படி விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

லுணுகலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் ஐந்து சிறுவர்கள் உள்ளிட்டு 21பேர், இன்றையதினம் (16-08-2021) கொவிட் 19 தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக லுணுகலை பிரதேச சுகாதார சேவை பணியகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதுளை அரசினர் மருத்துவமனையில் அம்பியுலன்ஸ் வாகன சாரதிகள் மூவர், பிரதி வைத்திய பணிப்பாளர் ஒருவர் உள்ளிட்டு நான்கு வைத்தியர்கள் ஆகிய ஏழு பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியிருப்பதாக, பதுளை மருத்துவமனை விசேட வைத்திய நிபுணர் பாலித்த ராஜபக்ச கூறினார். இவர்கள் அனைவரும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தினர் தத்தம் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நூற்றுக்கு 60 வீதமானவர்கள், பதுளை அரசினர் மருத்துவமனையில் கொவிட் 19 தொற்றாளர்களாக இருந்து வருகின்றதாகவும் விசேட வைத்திய நிபுனர் பாலித்த ராஜபக்ச தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33