நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மணலை விற்பனை செய்யாவிட்டால் அனுமதி பத்திரம் இரத்துச் செய்யப்படும் : மன்னார் அரச அதிபர்

Published By: Digital Desk 2

16 Aug, 2021 | 05:02 PM
image

மன்னார் மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட விலைக்கு மணல் விற்பனை செய்யப்படாது அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் அவர்களின் மண் அகழ்விற்கான அனுமதி பத்திரம் இரத்துச் செய்யப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை மணல்  அகழ்வில் ஈடுபடுபவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு தொடர்பாக கடந்த காலங்களில் மக்களினால் முன் வைக்கப்பட்ட முறைப்படுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை சார் திணைக்களங்களுடன் இணைந்து கள விஜயத்தை மேற்கொண்டு சில இடங்களில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதை தடுத்துள்ளோம்.

தற்போது மன்னார் மாவட்டத்தில் மணல் விலை அதிகரித்துள்ளதாக மக்களிடம் இருந்து தொடர்ச்சியாக முறைப்பாடு கிடைக்கப்பெற்ற நிலையில் மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்விற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்களுடன் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டோம். 

அதன் அடிப்படையிலும்,புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் அண்மையில் மேற்கொண்ட கள ஆய்வுக்கு அமைவாக அவர்களால் வழங்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையிலும் நாங்கள் தற்போது மன்னார் மாவட்டத்தில் 46 அனுமதிப்பத்திரத்தை வழங்கி உள்ளோம்.

இந்த அனுமதிப்பத்திரங்கள் இலுப்பைக்கடவை,கூராய், அருவியாறு, பெரியமடு, முசலி போன்ற இடங்களில் மணல்  அகழ்வு செய்ய வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் ஊடாக மக்களுக்கு குறைந்த விலையில், மணல்  வழங்கப்பட வேண்டும் என்பதை அறியப்படுத்தி உள்ளோம். இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடி உள்ளோம்.

இதன் அடிப்படையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இடங்களுக்கு 1 டிப்பர் மணல் மண் 29 ஆயிரம் ரூபாவிற்கும்,மன்னார் நகர பிரதேசச் செயலாளர் பிரிவில் 30 ஆயிரம் ரூபாவிற்கும்,தலைமன்னார் பிரதேசத்திற்கு 34 ஆயிரம் ரூபாவிற்கும், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 32 ஆயிரம் ரூபாவிற்கும் மண் விற்பனை செய்யப்பட வேண்டும் என தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தை உரிய முறையில் அமுல்படுத்த கிராம அலுவலகர்களுக்கு பிரதேசச் செயலாளர்களின் கையொப்பத்துடன்   சிட்டை வழங்க உள்ளோதோடு மணல்  அகழ்வு செய்பவர்களின் விபரங்களையும் வழங்கவுள்ளோம். அமுல்படுத்தப்பட்ட விலையை உறுதிபடுத்தி மணலை விநியோகிக்க வேண்டும். 

அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படும் போது தீர்மானிக்கப்பட்ட விலைக்கு மணலை விநியோகித்தார்களா? என்பது தொடர்பாகவும்  அனுமதிப்பத்திரம் மீண்டும் வழங்கப்படுவது தொடர்பாகவும்  ஆராயப்படும்.

மணலை அதிக விலைக்கு விற்பனை செய்தால் அல்லது மண் கேட்ட போது வழங்கப்படாது விட்டால் உடனடியாக அவர்களின் விபரங்கள் எங்களுக்கு வழங்கப்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவர்களின் அனுமதிப்பத்திரமும் ரத்துச் செய்யப்படும்.மக்களின் அவசிய தேவைகளையும்,அபிவிருத்தி பணிகளையும் கருத்தில் கொண்டு குறித்த மணல் அமுல்படுத்தப்பட்ட விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47