பருத்தித்துறையில் இராணுவ முகாமிற்கென தனியார் காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிர்ப்பு

Published By: Digital Desk 3

16 Aug, 2021 | 03:29 PM
image

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென தனியார் காணி நான்கு ஏக்கர் சுவீகரிப்பதற்க்கான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று  திங்கட்கிழமை காலை போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது நில அளவை மேற்கொள்ள வந்த நில அளவையாளர்கள் மற்றும் அதிகாரிகளை நில அளவை மேற்கொள்ள செல்லவிடாது வீதிக்கு குறுக்கே இருந்து தடுத்து நிறுத்தியதுடன் குறித்த காணிகளை இராணுவத்திற்க்கு வழங்க விடமாட்டோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  கூறியிருந்தனர்.

போராட்டம் சுமார் ஒருமணி நேரம் நீடித்த நிலையில் குறித்த காணியை இராணுவத்திற்கு வழங்க மாட்டோம் என பொது மக்கள் சார்பில்  யாராவது தெரிவித்தால் தாம் திரும்பி செல்வதாக நில அளவை திணைக்கள அதிகாரி தெரிவித்ததற்கு அமைவாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கடிதம் எழுதி நில அளவை திணைக்கள அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நில அளவை திணைக்கள அதிகாரிகள் திரும்பி சென்ற நிலையில் குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இன்றைய எதிர்ப்பு போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர செல்வராசா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சட்ட ஆலோசகர் ந.காண்டீபன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04