நடிகை கீர்த்தி பாண்டியனின் 'கண்ணகி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Digital Desk 2

16 Aug, 2021 | 02:32 PM
image

நடிகை கீர்த்தி பாண்டியன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கண்ணகி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும், ரீமேக் இயக்குனர் ஜெயம் ராஜாவும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டனர்.

அறிமுக இயக்குனர் ஷாலின் ஜோயா இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் திரைப்படம் 'கண்ணகி'.

இதில் கதையின் நாயகிகளாக நடிகை கீர்த்தி பாண்டியன், நடிகை வித்யா பிரதீப், நடிகை அம்மு அபிராமி ஆகியோர் நடிக்க இவர்களுடன் நடிகர் வெற்றி, நடிகர் ஆதேஷ்வர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஷான் ரகுமான் இசை அமைத்திருக்கிறார்.

தயாரிப்பாளர்கள் எம் கணேஷ் மற்றும் ஜே தனுஷ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் மூலம் மலையாள நடிகை ஷாலின் ஜோயா இயக்குனராக அறிமுகமாகிறார்.

இவர் மலையாளத்தில் இரண்டு குறும்படங்களை இயக்கியவர் என்பதும், அவருடைய இயக்கத்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

'கண்ணகி' என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகை கீர்த்தி பாண்டியனின் கருவுற்ற வயிற்று பகுதியிலிருந்து நஞ்சுக்கொடி ஒன்று வெளியே தொங்குவது போன்றும், அதன் இறுதியில் நெருப்பு ஒன்று எரிவது போன்று அமைந்திருப்பதால் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வரவேற்பை பெற்று வருகிறது. இருப்பினும் ஃபர்ஸ்ட் லுக்கில் இயக்குனரின் பெயர் இடம்பெறாதது ஏன்? என்பது தெரியவில்லை என்கிறார்கள் இணையவாசிகள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37