ஆசிரியர் - அதிபர் பிரச்சினைகளுக்கான அமைச்சரவை உபகுழு அறிக்கை அடுத்தவாரம்: மஹிந்த அமரவீர

Published By: J.G.Stephan

16 Aug, 2021 | 03:00 PM
image

(இராஜதுரை ஹஷான்)
ஆசிரியர்- அதிபர் சேவையில் நிலவும்  அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து அமைச்சரவை உபகுழுவினர் தயாரிக்கும் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை  அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். சம்பள பிரச்சினை குறித்து நிதியமைச்சருடன் இவ்வாரம் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம் என அமைச்சரவை உபகுழு உறுப்பினரும்,  சுற்றாடற்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போதைய  நிலையில் நாட்டு மக்கள்  அனைவரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆசிரியர் - அதிபர் சேவையில் கடந்த 24 வருட காலமாக சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் இவர்கள்  வேதன அதிகரிப்பு தொடர்பில் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்கள். கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும், அதற்கான தருணம் இதுவல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

வேதன பிரச்சினையை முன்வைத்து ஆசிரியர்கள் கடந்த இரண்டு மாத காலமாக  நிகழ்நிலை முறைமை ஊடான கற்பித்தலில் இருந்து விலகி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இதனால் மாணவர்களின் கல்வி நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்கத்தினர் முன்வைத்த கோரிக்க்கைக்கு தீர்வுகாண அமைச்சு மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியடைந்தன.

 பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்தின் ஊடாக  பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியது. இதற்கு தொழிற்சங்கத்தினர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள்.

  இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணும் பொருட்டு  அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56