60 வயதிற்கு மேற்பட்டவர்களே கொரோனாவால் அதிகம் உயிரிழக்கின்றனர் : தடுப்பூசி பெறுமாறு அறிவுறுத்தல்

Published By: Digital Desk 4

16 Aug, 2021 | 01:17 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் தொற்றில் மரணிப்பவர்களில் நான்கில் மூன்று பேர் 60 வயதுக்கு மேற்பட்ட, கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களாகும்.

இவ்வாறு மூன்று இலட்சத்துக்கும் அதிகமான முதியவர்கள் முதலாம் கட்ட தடுப்பூசியை கூட இதுவரை பெறாமல் இருக்கின்றனர்.  

எதிர்வரும் நாட்கள் ஆபத்தானவை - சன்ன ஜயசுமன | Virakesari.lk

அவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதன் மூலமே மரணங்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என ராஜாங்க அமைச்சர் வைத்தியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

கொவிட் காரணமாக மரணிப்பவர்களில் அதிகமானவர்கள் முதியவர்கள் என்பதனால், அதனை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையில் மொத்த சனத்தொகை  220 இலட்சமாகும். இதில் 27அரை இலட்சம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகும். அதாவது, மொத்த சனத்தொகையில் எட்டில் ஒன்று 12.5 வீதமானவர்கள் முதியவர்களாகும். 

கொவிட் தொற்றில் உயிரிழக்கும் எண்ணிக்கையை பார்க்கும்போது அது அவர்களில் 75வீதமாகும்.

அதாவது நான்கில் மூன்று பேர் 60வயதுக்கு மேற்பட்டவர்களாகும். அப்படியாயின் நாட்டில் ஏற்படும் கொவிட் மரணங்களில் அதிகமானவை 60வயதுக்கு மேற்பட்டவர்களாகும்.

அதனால் பொலிஸார், கிராமசேவகர்களின் ஒத்துழைப்புடன், இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களை இனம் கண்டு, அவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு விசேட ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. 

அவர்களில் அதிகமானவர்கள் பல்வேறு நோய்கள் காரணமாக வீட்டில் இருந்து வெளியில் செல்ல முடியாமல் இருப்பதாக எமக்கு தகவல் கிடைத்திருக்கின்றது. அதனால் அவர்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06