இந்தியாவில் சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் குளியலறையில் கெமரா வைத்து பெண்கள் குளிப்பதைப் படம் பிடித்த நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அவரது வீட்டில் பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் கார்களில் பொருத்தப்படும் சிவப்பு குழல் விளக்குகள், போலி அடையாள அட்டைகள் உள்ளிட்டவை சிக்கியுள்ளன.

தன்னை சிபிஐ அதிகாரி என்று கூறி அவர் நாடகமாடியதையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

குறித்த சந்தேக நபர் விடுதியில் இருந்த ஒரு பெண்ணிடம் தான் எடுத்த படத்தைக் காட்டி இது வெளியில் போகாமல் இருக்க வேண்டுமானால் எனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று கூற மிரட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெண்கள் விடுதியில் நடந்த இந்த அக்கிரமச் செயலால் அங்கு தங்கியுள்ள பெண்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

அந்தக் கெமராவில் பதிவான காட்சிகளை கைதான நபர் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளாரா என்பது குறித்தும் பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.