ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை எவ்வாறு கைப்பற்றினர்?

Published By: Vishnu

16 Aug, 2021 | 10:42 AM
image

(ஜெ.அனோஜன்)

20 வருட அமெரிக்க தலையீடு, ஆயிரக் கணக்கான உயிரிழப்புகள், குறைந்த பட்சம் 1 டிரில்லியன் அமெரிக்க டொலர் சொத்து சோதங்களுக்கு பின்னர் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.

Image

 

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியை எவ்வாறு கைப்பற்றினர் என்பது இங்கே:

  • அல்கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 9/11 தாக்குதல்களை நடத்தி ஒரு மாதத்திற்குள், அமெரிக்க மற்றும் நட்பு படைகள் ஆப்கானிஸ்தானில் "ஆபரேஷன் நீடித்த சுதந்திரம்" (Operation Enduring Freedom) என்ற தாக்குதலைத் தொடங்கின. 
  • 2001 டிசம்பர் 7, அன்று கந்தஹார் நகரம் விழுந்ததால் தாலிபான்கள் அதன் கடைசி முக்கிய கோட்டையை இழந்தனர். அப்போதிருந்து, தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் இருந்த காலத்திலும் மற்றும் பல அமெரிக்க நிர்வாகங்களிலும் ஆட்சியைப் பிடிக்க முயன்றனர்.
  • 2017 ஜனவரியில் தலிபான்கள், அப்பொழுது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு ஒரு திறந்த கடிதத்தை அனுப்பியதோடு, அமெரிக்க படைகளை நாட்டிலிருந்து திரும்பப் பெறுமாறு அழைப்பு விடுத்தனர்.
  • 2017 மற்றும் 2019 க்கு இடையில் அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, அவை ஒரு ஒப்பந்தமாக முடிவடையவில்லை.
  • அமெரிக்க படைகளுக்கு நன்றி செலுத்துவதற்காக 2019 நவம்பரில் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு திடீர் பயணத்தின் போது, தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதாக டிரம்ப் அறிவித்தார். அந்த ஆண்டு டிசம்பரில் கத்தார் நாட்டின் தோஹாவில் அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது.
  • 2020 பெப்ரவரியில் அமெரிக்காவும் தலிபான்களும் ஒரு வரலாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இது ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை முழுமையாக திரும்பப் பெறுவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியது.  இது "ஆப்கானிஸ்தானுக்கு சமாதானத்தை கொண்டுவருவதற்கான ஒப்பந்தம்" அமெரிக்கா மற்றும் தலிபானின் படைகளின் நிலைகள், பயங்கரவாதத்தை எதிர்ப்பது மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான உரையாடல் "நிரந்தர மற்றும் விரிவான போர்நிறுத்தத்தை" கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டமைந்தது.
  • தலிபான்களுடனான ட்ரம்ப் நிர்வாகத்தின் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திட்ட அடுத்த மாதத்தில், கிளர்ச்சிக் குழு அமெரிக்காவின் ஆப்கானிய கூட்டாளர்கள் மீதான தாக்குதல்களை வழக்கத்தை விட அதிகமாக அதிகரித்தது.
  • 2020 ஆகஸ்ட்டில் ஆப்கானிஸ்தானின் உயரிய சபையின் ஆலோசகர் லோயா ஜிர்கா, கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர, கிளர்ச்சி குழுவுடன் நேரடி அமைதி பேச்சுவார்த்தைக்கு வழி வகுத்து, சுமார் 5,000 தாலிபான் கைதிகளின் கொண்ட இறுதி குழுவை விடுவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். பெப்ரவரியில் அமெரிக்கா மற்றும் தலிபான்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 400 கைதிகளின் விடுதலை இருந்தது.
  • 2021 மார்ச்சில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானியும் பைடன் நிர்வாகமும் தலிபான்களுடன் ஒரு இடைக்கால அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஆப்கானிஸ்தான் அரசுக்கு முன்மொழிந்தனர்.
  • 2021 ஏப்ரலில் ஜனாதிபதி பைடன், ஆப்கானிஸ்தானிலிருந்து செப்டம்பர் 2021 க்குள் அமெரிக்கா படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.
  • அமெரிக்கா படைகளை வாபஸ் பெறத் தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு, பைடன் நிர்வாகம் தலிபான்கள் நாட்டில் கட்டுப்பாட்டைப் பெற முனைந்தமையினால் 2021 ஆகஸ்டில் ஆப்கானிஸ்தானுக்குள் 5,000 வீரர்களை அனுப்பியது.
  • 2021 ஆகஸ்ட் 15 அன்று, ஆப்கானிஸ்தான் முழுவதும் காபூலைத் தவிர, ஒவ்வொரு முக்கிய நகரத்தையும் தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு, தலிபான்கள் தலைநகரில் அரசாங்கத்தை நாட்டை ஆள்வது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
  • தலிபான்கள் இப்போது நாட்டை முழுமையாகக் கட்டுப்படுக்குள் கொண்டு வருவதற்கு தயாராகவுள்ளதுடன் ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் காபூலில் உள்ள ஜனாதிபதி மாளிகையையும் கைப்பற்றியுள்ளனர். ஒரு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கான முந்தைய பேச்சுவார்த்தைகள் கானியின் வெளியேற்றத்தால் தோல்வியடைந்ததாகத் தெரிகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22