மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றினால் வெற்றி கொள்ள முடியும் - சந்திரசேன

Published By: Digital Desk 4

15 Aug, 2021 | 04:55 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட் தாக்கத்தினை கருத்திற் கொண்டு  நாட்டை மூடுங்கள் என ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். நாட்டை மூடினால் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என பிறிதொரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். இவ்விடயங்களை ஆராய்ந்து அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. 

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை நாட்டு மக்கள் முறையாக பின்பற்றினால் தற்போதைய நிலையினை வெற்றிக் கொள்ள முடியும் என காணி விவகார அமைச்சர் எஸ். எம். சந்திரசேன தெரிவித்தார்.

Articles Tagged Under: அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன | Virakesari.lk

அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாட்டை முடக்குங்கள் என  ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். நாட்டை முடக்கினால் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்படும் என  பிறிதொரு தரப்பினரும் குறிப்பிடுகிறார்கள்.இவ்விரு நிலையில் இருந்தும் தீர்மானங்களை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

 நாட்டை முழுமையாக முடக்காமல் கொவிட்தாக்கத்தை கட்டுப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளன.

பொது மக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எதிர்தரப்பினர்குறிப்பிடுவதை போன்று நாட்டை முழுமையாக முடக்கினால் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவார்கள்.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த  அரசாங்கம் உரிய  தீர்மானங்களை முன்னெடுத்துள்ளது. நாட்டு மக்கள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றினால் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை வெற்றிக் கொள்ள முடியும்.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களையும், அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் எதிர் தரப்பினர் செயற்படுகிறார்கள். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08