வைத்தியசாலைகளில் குவியும் சடலங்கள் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்க விசேட குழு - நிமல் லன்சா

Published By: Digital Desk 4

15 Aug, 2021 | 02:51 PM
image

(எம்.மனோசித்ரா)

ராகமை வைத்தியசாலையில் கடந்த 6 மாதங்களாக அடையாளம் காணப்படாத நிலைமையில் இறுதி கிரியைகளை முன்னெடுக்காமல் 48 சடலங்கள் வைக்கப்பட்டிருந்தமையே அண்மையில் அங்குள்ள பிரேத அறையில் இடப்பற்றாக்குறை ஏற்பட பிரதான காரணமாகும் என்று கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டில் பிரதான வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் நிறைவடையும் - நிமல்  லன்சா | Virakesari.lk

இவற்றில் 28 சடலங்கள் தற்போது அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் , எஞ்சியவற்றை வெகுவிரைவில் அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

சடலங்கள் தொடர்பில் துரித நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்காக உள்ளுராட்சி உறுப்பினர்கள் , பொலிஸார் , முப்படையினர் , அரச அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 6 மாதங்களாக அடையாளம் காணப்படாத 48 சடலங்கள் இறுதி கிரிகைகள் செய்யப்படாமல் வைக்கப்பட்டிருந்தமையே அண்மையில் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலங்களை வைப்பதற்கான இடப்பற்றாக்குறை ஏற்பட பிரதான காரணமாகும்.

எனவே நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக குறித்த சடலங்களுக்கான இறுதிகிரியைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 28 சடலங்கள் மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேசத்திலும் , ராகமை தலகொல்ல பொது மயானத்திலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள சடலங்களை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் பாதுகாப்புபிரினரின் ஒத்துழைப்புடன் எதிர்வரும் சில தினங்களுக்குள் முன்னெடுக்கப்படும்.

கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை பொறுப்பேற்கவுள்ள உறவினர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை , கம்பஹா மாவட்டத்திலிருந்து வெளியேறுதல் , உறவினர்களை இனங்காண முடியாமை உள்ளிட்ட காரணிகளால் ஏற்பட்ட தாமதங்களை தவிர்த்து , உறவினர்களுடன் துரிதமாக தொடர்புகளை ஏற்படுத்தி குறித்த சடலங்களை முறையாக தாமதமின்றி தகனம் அல்லது அடக்கம் செய்வதற்கு தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளும் இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தின் கொவிட் கட்டுப்பாட்டு செயலணி , மாவட்ட அபிவிருத்தி குழு , குறித்த பிரதேச அபிவிருத்தி குழு  என்பவற்றின் ஊடாக சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசண்ண ரணதுங்கவின் ஆலோசனைக்கமைய அரசியல் அதிகாரிகள் , உள்ளுராட்சி உறுப்பினர்கள் ஆகியோரும் இதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50