"ஐ.தே.கட்சியின் 70 வது சம்மேளனம் ஜனாதிபதி தலைமையில் நடைப்பெறும்"

Published By: Robert

08 Sep, 2016 | 03:52 PM
image

ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது சம்மேளனத்தை நடாத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் 600 அதிகமான தொழிற்சங்கங்கள் கொழும்பை நோக்கி வரவுள்ளதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைத்தாங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூளை மறுநாள் சனிக்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது சம்மேளனம் கொழும்பு கெம்பல் பாக் மைதானத்தில் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு தொழிங்சங்களும் 600 அதிகமான அரச மற்றும் தனியார் தொழிற்சங்க கிளை அமைப்புகளும் அன்றைய தினம் கொழும்பிற்கு ஊர்வலமாக வரவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவின் தலைவரும் தேசிய ஊழியர் சங்கத்தின் செயலாளருமான பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத மெல் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைப்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது சம்மேளனத்தில் பல்லினத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. மேலும் பல இலட்சம் கட்சி ஆதரவாளர்களை  உள்ளடக்கும் வகையில்  ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் சம்மேளனத்தின் போது எதிர்கால கொள்கை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஷேட உரையாற்றவுள்ளதுடன் கூட்டாட்சியின் வெற்றியை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:01:06
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30