“சேர் பெய்ல் “ என்று ஏன் குறிப்பிடுகிறார்கள்?: தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள் என்கிறார் விஜயதாஸ..!

Published By: J.G.Stephan

14 Aug, 2021 | 03:12 PM
image

(இராஜதுரை ஹஷான்)
கொவிட் தாக்கத்தின் முதலாம் சுற்றினை  சிறந்த முறையில் வெற்றிக் கொண்டவர்கள் இன்று பொருத்தமான பதவியில் இல்லை. அதனால் நாடு தோல்வியடைந்துள்ளது.கொவிட் தாக்கத்தை அரசியல் நோக்கத்திற்காக  பயன்படுத்திக் கொண்டதன் விளைவை நாட்டு மக்கள் இன்று எதிர்க் கொள்கிறார்கள். நீங்கள்  என்ன செய்கின்றீர்கள் என்பதை அறிய முடியவில்லை. என உங்களின் சகோதரர்கள் குறிப்பிடும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. 

ஆகவே 38 மாத காலமே இன்னும் மிகுதியாகியுள்ளது. தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். “சேர் பெய்ல் “ என்று நாட்டு மக்கள் ஏன் குறிப்பிடுகிறார்கள். என்பதை சற்று பொறுமையுடன் சிந்தியுங்கள் என  பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ பல கேள்விகளை முன்வைத்து தனது முகப்பு புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மஹந்தவின் ஆட்சி காலத்தில் சைட்டம் பிரச்சினை தோற்றம் பெற்று 3 ஆண்டு காலமாக இப்பிரச்சினை நாட்டை சீரழித்தது. 410 போராட்டங்கள் இப்பிரச்சினைக்காக முன்னெடுக்கப்பட்டன. நான் இப்பிரச்சினைக்கு ஒரு வார காலத்தில் தீர்வு வழங்கினேன். 2017 ஆம் ஆண்டு நடைப்பெற்ற  ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் பண்டிகை உலகில் இடம் பெறும் சிறப்பான பௌத்த பண்டிகையாகும். 74 நாடுகள் பங்குப்பற்றின. நாம் சர்வதேசத்தின் நன்மதிப்பை வெற்றிக் கொண்டோம்.

 மேலும், நான் அமைச்சு பதவியினை ஐந்து முறை நிராகரித்துள்ளேன். ஒரு முறை அமைச்சு பதவியை துறந்துள்ளேன். நான் யாரையும் பழிவாங்கவில்லை. பழிவாங்குவதாக இருந்தால்  எனது வீட்டுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர்களை பழிவாங்கியிருக்க வேண்டும். நீங்களும் வெலிக்கடை சிறை செல்லாமல் தப்பித்ததும் அதனால் தான்  என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53