மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்: இறுக்கமாக்கப்படும் சில கட்டுப்பாடுகள்..!

Published By: J.G.Stephan

14 Aug, 2021 | 02:42 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொற்றாளர்கள் சடுதியாக அதிகரித்து காணப்படுவதனால் சில கட்டுப்பாடுகளை இறுக்கமாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பொது ஒன்று கூடல்கள் ஊடாகவே அதிகளவான தொற்றுக்கள் கொண்ட கொத்தணிகள் உருவாகின்றது. இதனால் ஆலய நிகழ்வுகள், திருமண வைபவங்கள், மரண சடங்குகள், வைபவங்கள் உட்பட ஏனைய நிகழ்வுகளிற்கு அதி உச்சமாக 15 பேர் மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தினால் புதிய சுற்று நிருபங்கள் நடைமுறைக்கு வரும்வரை இக்கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்குமெனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அதிகரித்து வருகின்ற கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தயாராக உள்ளதெனவும், தற்போது 4 விடுதிகளில் கொவிட் நோயாளர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போதைய நிலையினை கருத்திற் கொண்டு கட்டில்கள் அதிகரிக்க வேண்டிள்ளதனால் மட்டக்களப்பு நாவற்காடு பிரதேச வைத்தியசாலையையும் எதிர்வரும் 16 ஆந் திகதி முதல் இணைத்துக்கொள்ளப்பட்டு கொவிட் நோயாளர்களுக்காக சிகிச்சைகள் அழிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றதெனவும், அவசரமான அவசியமான நோயாளர்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி.கே.கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33