இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ட்ரிபிள் ஏ. இந்த படத்தின் கதை முதலிரவே கொண்டாட முடியாமல் தவிக்கும் இளைஞனின் கதையாம். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு இந்த கதையில் நடிப்பதால் கோடம்பாக்கம் அதிர்ந்து கிடக்கிறதாம்.

ஏற்கனவே இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை நாயகனாக வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் எடுத்த திரிஷா இல்லன்னா நயன்தாரா படம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. தற்போது இது மாதிரி கதையில் சிம்புவை நடிக்க வைத்து ட்ரிபிள் ஏ என பெயர் வைத்துள்ளதால் இந்த படமும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தும் என இப்பொழுதே கிசுகிசுக்கப்படுகிறது.

முன் ஜென்மத்தில் 2 நாய்கள் உல்லாசமாக இருக்கும் போது கல்லெறிந்து அதனை இடையூறு செய்த இளைஞன், இந்த ஜென்மத்தில் திருமணமாகியும் முதலிரவு கொண்டாட முடியாமல் தவிக்கும் கதை தான் இந்த படம் என தகவல்கள் வருகின்றன. இந்த படத்தில் சிம்பு 3 வேடங்களில் நடிக்க இருப்பது கூடுதல் தகவல்.