முழுபொறுப்பையும் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிடம் ஒப்படைத்துவிட்டு அரசாங்கம் விலகுவதே சிறந்தது: நளின் பண்டார

Published By: J.G.Stephan

12 Aug, 2021 | 04:58 PM
image

(எம்.மனோசித்ரா)
இலங்கையின் சனத்தொகைக்கு சமமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அவதானிக்கும் போது, இந்தியா உள்ளிட்ட நாடுகளை விட உயிரிழப்பவர்களின் வீதம் அதிகமாகக் காணப்படுகிறது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டாலும் சதவீதத்தின் அடிப்படையில் அதிகமாகவே காணப்படுகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

அதனடிப்படையில் கொவிட் மரணங்கள் அதிகம் பதிவாகும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதல் 5 இடங்களுக்குள் உள்ளடங்கக் கூடும். எனவே சுகாதார தரப்பிடம் முழுபொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு அரசாங்கம் அதிலிருந்து விலகியிருக்க வேண்டும். அத்தோடு அமைச்சரவை மாற்றத்தின் போது சுகாதார அமைச்சு  இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிடம் ஒப்படைக்கப்படுவதே சிறந்தது என்றும்  நளின் பண்டார தெரிவித்தார்.

மேலும், நாளொன்றுக்கு தற்போது நூற்றுக்கும் அதிக மரணங்கள் பதிவாகின்றதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், இந்த தரவில் எமக்கு சந்தேகம் நிலவுகிறது. மக்களுக்கு ஆபாயத்தை குறைவாக்க காண்பித்து அரசாங்கம் தவறிழைத்துக் கொண்டிருக்கிறது. சுகாதாரத்துறையினரிடம் கொவிட் கட்டுப்படுத்தல் பொறுப்புக்களை முழுமையாக ஒப்படைக்காமல் தற்போதுள்ள நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது.

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி , சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் என சகலரும் தோல்வியடைந்துள்ளனர். கொவிட் பரவல் முதலாம் அலையின் போது அரசாங்கம் கூறுவதற்கு தலையசைத்துக் கொண்டிருக்காமல் அதனை சிறப்பான முறையில் கட்டுப்படுத்திய முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவை கொவிட் கட்டுப்படுத்தல் செயலணியில் ஒரு அங்கத்துவராகவேனும் இணைத்துக் கொள்ளுமாறு நாம் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளோம்.

ஆனால் தற்போது சுகாதார அமைச்சர் மற்றும் ஏனைய 3 இராஜாங்க அமைச்சர்களையும் நியமித்து இவர்கள் நால்வரும் நான்கு திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். தடுப்பூசி வழங்குவது தொடர்பிலும் போலியான தரவுகளே வெளியிடப்படுகின்றன. இலங்கையில் இதுவரையில் 20 சதவீதமானோருக்கு மாத்திரமே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இரு கட்டங்களாகவும் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டோர் 18 வீதம் மாத்திரமே. முதற்கட்டமாகவும் இரு கட்டங்களாகவும் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள் எண்ணிக்கைக்கு இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43