கிளிநொச்சியில் இராணுவத்தினரிடமிருந்த தனியார் காணி விடுவிப்பு

Published By: Gayathri

12 Aug, 2021 | 12:12 PM
image

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த தனியாருக்கு சொந்தமான காணி இன்று விடுவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை விடுவிக்கப்பட்ட காணியில் இடம் பெற்றது. 

2010 ஆம் ஆண்டு முதல் படையினர் வசம் இருந்த காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்ட நிலையில் குறித்த காணி தொடர்ந்தும் படையினர் தம்வசம் வைத்திருந்தனர்.

இந்த நிலையில்  காணி உரிமையாளர் அதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கரேந்ர ரணசிங்கவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, ஜனாதிபதி கோட்டாபாஜ ராஜபக்சவின் பணிப்பின் பெயரில் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

57 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெயவர்த்தனவினால் குறித்த காணி கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரனிடம் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்த காணி உரிமையாளரின் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் காணியை உரிமையாளரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் தெரிவித்தார்.

நிகழ்வில் 57 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் G.R.R.P ஜெயவர்த்தன, கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன், கிராமசேவையாளர், காணி உரிமையாளர் என பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50