மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும்: பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம்

Published By: J.G.Stephan

11 Aug, 2021 | 06:41 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டின் தற்போதைய நிலைமையில் மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடு பெயரளவில் அல்லாமல் கடுமையாக்கப்படவேண்டும். அத்துடன் இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்தல் மற்றும் மக்களின் சுகாதார பாதுகாப்பை முகாமைத்துவம் செய்தல் என்ற இரண்டுக்கும் இடையில்தான் பிரச்சினை இருக்கின்றது. கொவிட்டினால் பொருளாதார வீழ்ச்சியடைந்திருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதனால் இதுதொடர்பாக தீர்மானங்களை எடுக்கக்கூடிய அதிகாரிகள் இந்த விடயங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்து பார்த்திருப்பார்கள்.

என்றாலும் மக்களின் சுகாதார பாதுகாப்பு விடயங்களில் செயற்பட்டுவரும் பிரிவினர் என்றவகையில், நாட்டின் தற்போதைய நிலையை மிகவும் பயங்கரமான நிலைமையாகவே எங்களால் பார்க்க முடிகின்றது. நாளுக்குநாள் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது. நேற்றைய தினம் 118 மரணங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது பாரிய பிரச்சினையாகும்.

அதனால் நாட்டின் தற்போதைய நிலைமையை பார்க்கும்போது கடுமையான தீர்மானங்களை எடுக்கவேண்டும். இதுதொடர்பாக ஊடகங்கள் மூலமாகவும் மக்களுக்கு எடுத்துக்கூறி வருகின்றபோதும், அவர்களிடமிருந்து வரும் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை. ஒன்றுகூடல்கள், விழாக்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அதனால் மாகாணங்களுக்கிடையிலான கட்டுப்பாடு கட்டாயமாக இடம்பெறவேண்டும். அது பெயரளவில் இல்லாமல், நிலைமையை உணர்ந்து கடுமையான கட்டுப்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13