உருமாறி வரும் வைரஸ்களுக்கு தடுப்பூசிகள் சவாலாகாது: அவதானமிக்க காலக்கட்டம் - விசேட வைத்திய நிபுணர் நதீக ஜானகே

Published By: J.G.Stephan

11 Aug, 2021 | 05:55 PM
image

(எம்.மனோசித்ரா)
உருமாறி வரும் வைரஸ்களுக்கு தடுப்பூசிகள் சவாலாக அமையாது. எதிர்வரும் காலங்களில் உருவாகக் கூடிய நிலைமாறிய வைரஸ்கள் தற்போது கட்டங்களாகவும் தடுப்பூசியைப் பெற்று முழுமையான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று உத்தரவாதமளிக்க முடியாது. எனவே முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வைரஸ்நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நதீக ஜானகே தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத போது டெல்டா வைரஸ் தொற்று இரு மடங்கு வேகமாகப் பரவக்கூடும். ஆரம்பத்தில் காணப்பட்ட வைரஸ் தொற்றிலிருந்து சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாத போதிலும் ஓரளவு தப்பிக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தன. ஆனால் டெல்டா தொற்றிடமிருந்து அவ்வாறு தப்பிக்க முடியாது.

குறிப்பாக மூடிய அறைகளில் காற்று குளிரூட்டி (ஏ.சி.) காணப்பட்டால் வைரஸ் பரவக் கூடிய வேகம் அதிகமாகக் காணப்படும். எனவே இவ்வாறான இடங்களில் இரு முகக்கவசங்களை அணிந்து மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரண்டாவது கட்டமாகவும் தடுப்பூசியைப் பெற்று இரு வாரங்களின் பின்னரே முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கப்பெறும். முழுமையான நோய் எதிர்ப்பு கிடைக்கப் பெற்றதன் பின்னர் தொற்றுக்கு உள்ளானாலும் மரணத்தை தவிர்க்க முடியும்.

ஆனால் இதனை ஸ்திரமாக நம்பிக் கொண்டிருக்க முடியாது. காரணம் வைரஸ்கள் காலம் செல்ல செல்ல மாற்றமடையும் போது தடுப்பூசிகள் அவற்றுக்கு சவாலாக அமையாது. உருமாறிவரும் வைரஸ்களுக்கு தடுப்பூசி சவாலாக அமையாது. எனவே தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதோடு, வைரஸ் பரவாமலும் தடுக்க வேண்டும். முதலாவது கட்டமாக மாத்திரம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களை முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி உடையவர்களாகக் கருத முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11