பொறுமையற்றவனாகக் காத்திருக்கின்றேன் - மனம் திறக்கிறார் மெஸ்ஸி

Published By: Gayathri

11 Aug, 2021 | 05:53 PM
image

பார்சிலோனா கழகத்திலிருந்து விடைபெற்ற ஆர்ஜன்டீனா அணித் தலைவரும் நட்சத்திர கால்பந்தாட்ட வீரருமான லியோனல் மெஸ்ஸி,  பாரிஸ் சென் ஜேர்மெய்ன் (PSG) கழகத்துடன் இரண்டு வருட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

34 வயதான மெஸ்ஸியின் இந்த ஒப்பந்தத்தில் 3 ஆவது வருடத்துக்கான வாய்ப்பும் இருக்கின்றது.

தனது வாழ்நாளில் பார்சிலோனா கழகத்துக்காக மாத்திரமே விளையாடியுள்ள மெஸ்ஸி, லா லிகா அமைப்பின் நியாயமான சம்பள விதிக்கு அமைவாக ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள முடியாமல் போனதால் அங்கிருந்து விலகிச்செல்ல நேரிட்டது.

'பாரிஸில் எனது புதிய கால்பந்தாட்ட அத்தியாயத்தை எப்போது ஆரம்பிக்கப்போகின்றேன் என்பதை ஆவலுடன் பொறுமையற்றவனாகக் காத்திருக்கின்றேன். 

எனது குறிக்கோள்களுடன் அக் கழகத்தினது நோக்கம் மிகவும் சரியாக பொருந்துகின்றது' என பாரிஸ் சென் ஜேர்மெய்ன் கழகத்துடனான ஒப்பந்தத்தின் பின்னர் மெஸ்ஸி தெரிவித்தார்.

'இங்குள்ள வீரர்களும் உதவியாளர்களும் எத்தகைய திறமைசாளிகள் என்பதை அறிவேன். அவர்களுடன் இணைந்து இரசிகர்களுக்காகவும் கழகத்துக்காகவும் சிறந்ததொன்றைக் கட்டியெழுப்ப உறுதியாக இருக்கின்றேன். 

பார்க் டெஸ் ப்றின்சஸ் மைதானத்தில் நான் எப்போது கால்களைப் பதிக்கப்போகின்றேனோ என்பதற்கான ஆவலை என்னால் பொறுக்க முடியாதுள்ளது' என்றார் அவர்.

இதேவேளை, மெஸியின் வருகையை பிஎஸ்ஜி கழகத் தலைவர் நாசர் அல் கெலைஃபி வெகுவாகப் பாராட்டினார்.

'பாரிஸ் சென் ஜேர்மெய்ன் கழகத்துடன் இணைவதற்கு லியோனல் மெஸி தேர்வு செய்தது குறித்து மகழ்ச்சி அடைகின்றேன். 

பாரிஸுக்கு அவரையும் அவரது குடும்பத்தினரையும் வரவேற்பதில் பெருமை அடைகின்றோம். உயரிய மட்டப் போட்டிகளில் கிண்ணங்களை வென்றெடுக்க வேண்டும் என்ற தனது அளவற்ற விருப்பத்தை அவர் மறைக்கவில்லை. 

அவரது அபிலாஷைகளும் கழகத்தின் அபிலாஷைகளும் நிச்சயமாக ஒரே மாதிரியானவை' என நாசர் அல் கெலைஃபி மேலும் தெரிவித்தார்.

'உலகத் தரம்வாய்ந்த எமது கழகத்தில் மேலதிகமாக லியோ இணைக்கப்படுள்ளதானது எமது ஆட்சேர்ப்பின் உசிதத்தன்மையையும் வெற்றியையும் உறுதிப்படுத்துகின்றது. 

அதிசிறந்த பயிற்றுநர் மற்றும் அவரது உதிவியாளர்களுடன் உலகம் முழுவதும் உள்ள எமது இரசிகர்களுக்காக எமது அணி வரலாறு படைப்பதை பார்க்க விரும்புகின்றேன்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய கழகத்தில் 30ஆம் இலக்க ஜேர்சியை அணிந்து மெஸி விளையாடவுள்ளார்.

முன்கள வீரரான மெஸ்ஸி, 6 தடவைகள் உலகின் அதி சிறந்த வீரருக்கான பெலன் டி'ஓர் விருதை வென்றவராவார். 

(என்.வீ.ஏ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58