ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஏற்­றுக்­கொள்­ளா­விட்டால் உங்­களால் இச்­ச­பையில் அமர்ந்­தி­ருக்க முடி­யாது என சபையில் உத­ய­கம்­மன்­பில எம்.பி.க்கு தெரி­வித்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க இக் கேள்­வியை சபா­நா­யகர் கரு­ ஜ­ய­சூ­ரி­ய­வி­டமும் முன்­வைத்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற பிர­தமர் பதில் வழங்கும் நேரத்தின் போது உதய கம்­மன்­பில எம்.பி. கேட்ட கேள்­விக்கு பதி­ல­ளித்துக் கொண்­டி­ருக்கும் போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இடை­ந­டுவில் இதனை தெரி­வித்தார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஏற்க முடி­யாது என உதய கம்­மன்­பில சபையில் தெரி­வித்த போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நீங்கள் ஏற்றுக் கொள்­ளா­விட்டால் உங்­க­ளுக்கு அம் முன்­ன­ணியின் எம்.பியாக இச் சபையில் அமர முடி­யாது. எப்­படி நீங்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்க முடியும்? சபாநாயகர் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் சபையில் தெரிவித்தார்.