மட்டக்களப்பு - மாமாங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் ஐவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை 

Published By: Digital Desk 4

10 Aug, 2021 | 01:29 PM
image

(எம்.மனோசித்ரா)

மட்டக்களப்பு - அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் ஐவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க்பபட்டு, அவர்கள் ஐவரும் நேற்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 25 000 ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் ஜீ.காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Articles Tagged Under: மாமாங்கேஸ்வரர் ஆலயம் | Virakesari.lk

மாமாங்கேஸ்வர ஆலய தீர்தோற்சவத்தில் பெருமளவானோர் கலந்து கொண்டமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைப்பட்ட நிலையில் , இது தொடர்பில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகளால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஜீ.காசிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவரது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

ஆலயத்தின் பிரதான பூசகர் உள்ளிட்ட ஆலய நிர்வாகத்தினர் நேற்று திங்கட்கிழமை முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த உற்சவத்தில் கலந்து கொண்ட அனைவரையும் பொலிஸார் இனங்கண்டுள்ளதோடு , அவர்களையும் 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுளளது.

தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் அவர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். தொற்றுநோய் தீவிரமடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் அனைவருக்கும் சமமாகும்.

ஏனெனில் இது அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதாகும். உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த விதிகளை மீற வேண்டாம் என்று நாங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44