'நீரில் கரைந்துவிட்ட நீர் திட்டம்': குடிநீர் திட்டமென எதிர்பார்த்திருந்த மக்களுக்கு கிடைத்த ஏமாற்றம்..!

Published By: J.G.Stephan

10 Aug, 2021 | 10:57 AM
image

குருணாகல் மாவட்டத்தில் பொல்பிதிகம தலாகொல கிராமத்தில் குடிநீர் என்பது ஓர் அரிய பொக்கிஷமாகவே காணப்படுவதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், அங்கு நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் திட்டமொன்று அண்மையில் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

மேலும், குறித்த பிரதேசத்தில், கடுமையாக சிறுநீரக பாதிப்புக்குள்ளானவர்கள் வசிப்பதாகவும் தெரியவந்துள்ளதுடன், இத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு கிராமத்தவர்கள் தமது பங்களிப்பையும் வழங்கியிருந்தனர்.

எனினும் இம்மக்களின் அனைத்து எதிர்ப்பார்ப்புகளும் கானல்நீராகிவிட்டது போல், புதிய திட்டத்தின் மூலம் கிடைக்கும் நீரானது குடிப்பதற்கு பொருத்தமற்றது என பலர் கண்டனம் தெரிவிக்கின்றனர். நீரில் கசப்பு தன்மை காணப்படுவதாக கூறும் சிலர் அந்நீரை குடித்த பின்னர் வயிற்றெரிச்சல் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுதவாகவும் கூறுகின்றனர். 

இத்திட்டமானது, அரச சார்பற்ற அமைப்பொன்றின் தலையீட்டினால் நிர்மாணிக்கப்பட்டது எனவும், இத்திட்டத்திற்கான மொத்த செலவு சுமார் 12 கோடி ரூபாய்கள் என்று கூறப்படுகின்றது.

இத்திட்டத்திற்கான வெளிநாட்டு நன்கொடையானது, அரச சார்பற்ற அமைப்பினூடாக அரசிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது எனவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் சிலவும் ஒன்றிணைந்து 2018 ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. 

எவ்வாறாயினும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சின் தலையீடோ அரச தலையீடோ இன்றி அரச சார்பற்ற அமைப்புகள் சில ஒன்றிணைந்து இத்திட்டத்தை மேற்கொண்டு வருவதாக  பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இலங்கை கடற்படையினரால், வெற்றிகரமான சுத்திகரிப்பு செயன்முறை மூலம் இப்பிரதேச மக்களுக்கு இலவசமாக நீர் வழங்கப்பட்டு வருகின்றது. எனினும் கோடிக்கணக்கில் செலவு செய்து தோல்விகாணும் ஓர் திட்டத்தை மேற்கொண்டது யாருடைய தேவைக்காக என்பது ஓர் கேள்விக்குறியாகும். 

அத்தோடு, மில்லியன் கணக்கில் செலவு செய்து மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை  உருவாக்கி மக்களை ஆபத்தில் தள்ளும் இவ்வாறான திட்டங்கள் தொடர்பாக பொறுப்பு கூற வேண்டியவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்வது அவசியமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44