முல்லைத்தீவு நந்திக் கடலில் 2009ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி அன்று நடந்த கடைசி 45 நிமிட யுத்தத்தில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்தார். எனது தலைமையிலான 53 ஆவது டிவிசன்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், கடற்புலிகளின் தளபதி சூசை, தளபதி பானு ஆகியோரை கொன்றது என்று முன்னாள் 53 ஆவது படை­ய­ணியின் கட்­டளை தள­பதி மேஜர் ஜெனரல் கமல் குண­ரட்ன தெரி­வித்தார் .

பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அண்டனி, கெமுனுவோச் படைப்பிரிவுடனான யுத்தத்தில் மே 18 ஆம் திகதி உயிரிழந்தார். அதே நேரத்தில் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் என்னவானார் என்பது எனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

விடு­தலை புலி­க­ளுக்கும் அரச படை­க­ளுக்கும் இடையில் இடம்­பெற்ற இறு­திக்­கட்ட போரின் போது 53 ஆவது படை­ய­ணிக்கு தலைமை தாங்­கிய மேஜர் ஜெனரல் கமல் குண­ரட்ன , போரின் அனு­ப­வங்­களை பகிரும் வகையில் நந்­திக்­க­ட­லுக்­கான பாதை என்ற நூலை எழு­தி­யுள்ளார். இந்த நூலின் வெளி­யிட்டு விழா கடந்த செவ்வாய் கிழமை கொழும்பு ஆனந்த கல்­லூ­ரியின் கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கையிலும் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெ ளியிடுகையிலுமேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பாய ராஜ­பக்ஷ உள்­ளிட்ட பாது­காப்பு துறைசார் ஆய்­வா­ளர்கள் , ஓய்­வுப்­பெற்ற தள­ப­திகள் என பலர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

அவர் அந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றுகையில்

இறு­திக்­கட்ட போரின் போது 53 ஆவது படை­யணி உள்­ளிட்ட ஏனைய படை­ய­ணிகள் சர்­வ­தேச மனித உரி­மை­களை கவ­னத்தில் கொண்டு செயற்­பட்­டன. அனைத்து இரா­ணுவ வீரர்­களும் வெற்­றியை நோக்கி செல்லும் போது புலிகள் வசம் சிக்­குண்­டி­ருந்த பொது மக்­களை பாது­காக்க வேண்டும் என்ற நோக்­கு­ட­னேயே முன்­னோக்கி சென்­றனர். எனவே தான் இறு­திக்­கட்ட போருக்கு மனி­தா­பி­மான நட­வ­டிக்கை என பெய­ரிட்டோம். ஆனால் இதன் பேர்து திட்­ட­மிட்ட இனப்­ப­டு­கொலை இடம்­பெற்­ற­தாக கூறும் விட­யங்கள் ஏற்றுக் கொள்ள முடி­யாது

போரின் வெற்­றிக்கு தலைமை வகித்து செய்­ற­பட்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ , முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ மற்றும் அப்­போ­தைய இரா­ணுவ தள­பதி ஜெனரல் சரத் பொன்­சேகா உள்­ளிட்­ட­வர்­களின் பங்­க­ப­ளிப்பை மறந்து விட முடி­யாது. 2009 மே மாதம் 19 ஆம் திகதி போரின் இறுதி தரு­ணங்­களில் விடு­தலை புலி­க­ளுக்கும் இரா­ணு­வத்­திற்கும் இடையில் 45 நிமிட கடும் போர் இடம்­பெற்­றது. இதன் முடிவில் காலை 9.30 மணி­ய­ளவில் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் சட­லத்தை கைப்­பற்ற முடிந்­தது. பயங்­க­ர­வாத போரை முடி­விற்கு கொண்டு வந்து நாட்டை பாது­காத்த அனைத்து இரா­ணுவ வீரர்­களின் பங்­க­ளிப்­பையும் மறந்து விட முடி­யாது.

1981 ஆம் ஆண்டு இலங்கை இரா­ணு­வத்தில் இணைந்துக் கொண்ட நான் சுமார் 35 வருட கால­மாக இரா­ணு­வத்தில் பணி­யாற்­றினேன். எனினும் இந் நேரத்தில் நான் ஓய்வு பெறு­வ­தை­யிட்டு கவ­லை­ய­டை­ய­வில்லை. பயங்­க­ர­வா­தி­க­ளிடம் இருந்து நாட்டை மீட்கும் சந்­தர்ப்பம் கிடைத்­த­தை­யிட்டு பெரு­மை­ய­டை­கின்றேன் .

நாட்டின் சுதந்­திரம் மட்­டுமே எனக்கு தேவைப்­பட்­டது. அத­னா­லேயே எனது உயி­ரையும் துச்­ச­மென மதித்து இறுதி கட்ட யுத்­தத்தில் கடு­மை­யாக போரா­டினோம். இன்று சர்­வ­தேச நாடுகள் வியக்கும் அள­வுக்கு நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளோம். சக இரா­ணுவ வீரர்­க­ளினால் இந்த வெற்றி எமக்கு கிடைத்­தி­ருக்­கின்­றது.

இறு­திக்கு கட்ட போரின்; போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ நாட்டை சுபிட்­ச­மான நிலை­மைக்கு கொண்டு செல்­வ­தற்­கான அனைத்து முயற்­சி­க­ளையும் செய்தார். அந்த முயற்­சியின் விளை­வாக இன்று நாடு சுதந்­திரக் காற்றை சுவா­சிக்­கி­றது.

இரா­ணு­வத்தில் நான் இணைந்து பணி­யாற்றும் போது எந்த ஒரு அர­சியல் கட்­சிக்கும் தலை சாய­வில்லை. அது போல எந்த ஒரு கட்­சியின் தலை­வ­ருக்கும் அடி­ப­ணிய வில்லை. எனது இரா­ணு­வத்தை மதித்து அத­னது பொறுப்­புக்­களை பாது­காத்தேன். அதன் விளைவு தான் சர்­வ­தேசம் போற்­று­கின்ற ஒரு மேஜர் ஜென­ர­லாக என்னை தரம் உயர்த்­தி­யி­ருக்­கி­றது எனலாம். இந்த நூல் நாட்­டுக்­காக உயிர் தியாகம் செய்த இரா­ணுவ வீரர்­க­ளுக்கு சமர்ப்­ப­ண­மா­கட்டும்.

என்­னு­டைய இளமை காலத்தில் திய­த­லாவை இரா­ணுவ முகாமில் என்­னோடு பணி­யாற்­றிய இரா­ணுவ வீரர்கள் இன்று உயி­ரோடு இல்லை. இந்­நி­லையில் இந்த நாட்டை மீட்­டெ­டுக்க பாடு­பட்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ , முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ மற்றும் யுத்­தத்தில் உயி­ரி­ழந்த இரா­ணுவ வீரர்­க­ளுக்கு நன்றி தெரி­வித்துக் கொண்டு இரா­ணுவ சேவையில் இருந்து விடை பெறு­கிறேன் என்றார்.

இதே­வேளை கமால் குண­ரட்ன ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், முல்லைத்தீவின் நந்திக் கடலில் 2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி அன்று நிகழ்ந்த கடைசி 45 நிமிட யுத்தத்தில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்ததார்.எனது தலைமையிலான 53 ஆவது டிவிசன்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், கடற்புலிகளின் தளபதி சூசை, தளபதி பானு ஆகியோரை கொன்றது.

2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் தொடங்கி 10.15 மணிவரை இறுதி யுத்தம் நடைபெற்றது.

நந்திக்கடலில் 45 நமிடங்கள் நீடித்த அந்த யுத்தத்தில்தான் பிரபாகரன் 4ஆவது விஜயபாகு படைப்பிரிவினால் கொல்லப்பட்டார். மே 18 ஆம் திகதி அன்று பொட்டம்மான் உயிரிழந்துவிட்டார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் சார்லஸ் அண்டனி அவர்போன்ற ஒருவர் உயிர் தப்பி வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்தால் நிச்சயம் வெளியே வந்திருப்பார். பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அண்டனி, கெமுனுவோச் படைப்பிரிவுடனான யுத்தத்தில் மே 18 ஆம் திகதி உயிரிழந்தார்.

பாலச்சந்திரன் அதே நேரத்தில் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் என்னவானார் என்பது எனக்குத் தெரியாது.

“பிர­பா­கரன் படிக்­கா­த­வ­ராக இருக்­கலாம், ஆனால் அவர் தனக்­குள்­ளேயும், தன்னைச் சுற்­றியும், கடு­மை­யான ஒழுக்­கத்தை பேணினார்.

தற்­கொலைத் தாக்­குதல் கலையை கட்­டி­ய­மைத்­தது இவர் தான்.அல்-­கு­வை­டாவின் முத­லா­வது, தற்­கொலைக் குண்­டு­தா­ரிக்கு முன்­பா­கவே, பிர­பா­கரன் 200 தற்­கொலைக் குண்­டு­தா­ரி­களை வைத்­தி­ருந்தார்.

பெரும்­பா­லான தற்­கொலைக் குண்­டு­தா­ரிகள் பெண்­க­ளா­கவே இருந்­தனர். தமது தலை­மையின் கட்­ட­ளைக்கு பணிந்து தமது உயிரைக் கொடுக்­கவும் அவர்கள் தயா­ராக இருந்­தனர். விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் அவர் பெண் போரா­ளி­களை தவ­றாகப் பயன்­ப­டுத்­தி­ய­மைக்கு எந்த சான்­றுமே கிடை­யாது.

அவர் ஒரு அன்­பான குடும்ப மனி­த­ராக இருந்தார். இரா­ணு­வத்­தினர், பிர­பா­க­ர­னி­னதும், அவ­ரது குடும்­பத்­தி­ன­ரதும், விடு­தலைப் புலி­களின் நிகழ்­வு­க­ளி­னதும், 10 ஆயிரம் ஒளிப்­ப­டங்­களைக் கைப்­பற்­றினர். ஆனால் ஒரு படத்தில் கூட மது­பான குவ­ளை­யுடன் பிர­பா­க­ரனை காண முடி­ய­வில்லை.

அவர் ஒரு ஒழுக்­க­மான தலை­வ­ராக இருந்தார். ஷரியா சட்­டத்தை விடவும் மேலான சட்­டத்தை பேணு­ப­வ­ராக அவர் இருந்தார். நீங்கள் திரு­டி­யி­ருந்தால் ஷரியா சட்­டத்­தின்­படி கையைத் தான் இழக்க நேரிடும். ஆனால் பிர­பா­க­ரனின் சட்­டத்தின் கீழ் வாழ்க்­கையை இழப்­பீர்கள்.

அவர் ஒரு இந்­து­வாக இருந்­தாலும், கட­வுளை நம்­ப­வில்லை. கடவுள் சக்­தி­வாய்ந்த நாடு­களில் தான் இருக்­கிறார் என்று அவர் ஒரு­முறை கூறி­யி­ருந்தார். அவர் ஒரு வித்­தி­யா­ச­மான தலைவர். பலரும், கற்க வேண்­டிய பல நல்ல பண்­புகள் அவ­ரிடம் இருந்­தன.

அவர் ஒரு உறு­தி­யான முடிவை எடுப்­ப­வ­ராக இருந்தார். எடுக்கும் முடிவு சரியோ தவறோ அதை­யிட்டு கவ­லைப்­ப­ட­மாட்டார். அந்த முடிவை நடை­மு­றைப்­ப­டுத்­துவார்.

ராஜீவ்­காந்­தியைக் கொலை அவ­ரது விவே­க­மற்ற ஒரு முடி­வு­களில் ஒன்று. ராஜீவ்­காந்­தியைக் கொல்­வதன் மூலம் இந்­தியா முழு­மை­யா­கவும், உல­கமும் தனக்கு எதி­ராகத் திரும்பும் என்று அவ­ருக்கு தெரியும்.

ஆனால் விடு­தலைப் புலி­களை அழிக்க இலங்­கை­யில்­இந்­திய அமை­திப்­ப­டையை நிறுத்­தி­ய­தற்குப் பழி­வாங்க அவர் விரும்­பினார். எனவே அவரைக் கொலை செய்தார். ஏனெனில் அவர் இரக்­க­மற்­றவர்.

அவ­ரிடம் பொறுமை நிறை­யவே இருந்­தது. தனது பய­ணங்­க­ளுக்கு அவர் அவ­ச­ரப்­ப­ட­வில்லை. தாக்­கு­த­லுக்கு சரி­யான தரு­ணம்­வரும் வரை காத்­தி­ருந்தார்.

பிர­பா­க­ரனின் தலை­மைத்­துவம், இறுதிநிமிடச் சமர் வரையில் மிகத்திறமையானதாகவே இருந்தது. ஏனைய தளபதிகளான பானு, ரட்ணம் மாஸ்டர், சூசை ஆகியோரும் மிகச்சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினர்.

இறுதி சிலநாட்களில் சூசையின் கட்டளைகளினால் யாரும் திரும்பிச்செல்ல விரும்பவில்லை. இந்த தளபதிகளின் கீழ் புலிகளின் கொமாண்டோக்கள், மிகநன்றாகவே செயற்பட்டனர்.

வேவுபார்க்கும் போராளிகள் தொடக்கம், தற்கொலைப் போராளிகளுக்கான வெடிபொருள் நிபுணர்கள், ஆட்டிலறி குழுக்கள், ஆட்டிலறி அவதானிப்பாளர்கள், எல்லோருமே, ஆற்றலுள்ள போராளிகளாகவே இருந்தனர்.

இறுதிச்சமரின் கடைசி சில மணித்தியாலங்கள் வரையில், விடுதலைப் புலிகளின் தலைமை கடுமையாகவே போரிட்டது.”