80 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயை கடந்த 15 வருட காலமாக வீட்டில் அடைத்து வைத்து இருந்த கொடூர சம்பவமொன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 
மொனராகல, சியம்பலாண்டுவ பகுதியில் தாய் தந்தை, இரு மகன்மார்கள், 3 மகள்மார்கள் உட்பட 7 பேர் கொண்ட குடும்பமொன்று வசித்து வந்துள்ளது. 80 வயதுடைய தாயின் பெயரிலே அனைத்து சொத்துகளும் இருந்துள்ளன. இந்நிலையில் இவருடைய கணவன் 28 வருடங்களுக்கு முன்னர் இறந்துள்ளார். இதன் பின்னர் தாயின் பெயரில் இருந்த அனைத்து சொத்துக்களையும் பிள்ளைகளும் பங்கிட்டு தம்வசப்படுத்திக்கொண்டு தாயை கைவிட்டுவிட்டுள்ளனர்.  பின்னர் 5 பிள்ளைகளும் தாயை ஒவ்வொரு வருடம் பராமரிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்திற்கு வந்துள்ளனர். 
எனினும் கடந்த 15 வருட காலமாக பாலடைந்த வீட்டில் அடிப்படை வசதிகள் அற்ற சுத்தமில்லாத அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.  இது குறித்து சியம்பலாண்டுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அந்ந தாயை மீட்டு சியம்பலாண்டுவ வைத்தியசாலையில்  பொலிஸார் அனுமதித்துள்ளனர்.  மேலும், இது குறித்து சியம்பலாண்டுவ பொலிஸார் குறித்த தாயின் பிள்ளைகளிடம் விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.

(செல்வராஜர்)