இந்தியாவை சாதகமாக பயன்படுத்திய இலங்கை

Published By: Digital Desk 2

09 Aug, 2021 | 05:34 PM
image

என்.கண்ணன்

 இந்திய - இலங்கை உடன்பாடு கையெழுத்திடப்பட்டு 34 ஆண்டுகள் முடிந்துவிட்டன.

இதனை முன்னிட்டு கடந்த ஜூலை 29ஆம் திகதி புதுடெல்லியில் உள்ள தேசியபோர் வீரர்கள் நினைவிடத்தில், முன்னாள் இந்திய இராணுவ அதிகாரிகள் சுமார் 30 பேர்அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்திய - இலங்கை உடன்பாட்டுக்குப் பின்னர், இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்திய அமைதிப்படையினரில், 1158 பேர் உயிரிழந்தனர் என்றும், 3000 பேர்காயமடைந்தனர் என்றும் ஒரு புள்ளிவிபரம் இருந்தாலும், உயிரிழந்த இந்தியப்படையினரின்எண்ணிக்கை 1248 என்று இன்னொரு தகவலும் உள்ளது.

இவர்களுக்கே, முன்னாள் இந்திய இராணுவ அதிகாரிகள் அஞ்சலிசெலுத்தியிருந்தார்கள்.அவர்களில், இந்திய அமைதிப்படையின் கட்டளைத் தளபதியாக இருந்தலெப்.ஜெனரல், ஏ.எஸ். கல்கட், லெப்.ஜெனரல் சையட் அடா ஹஸ்னாய்ன், லெப்.ஜெனரல்குர்மிட் சிங் உள்ளிட்டவர்களும் அடங்கியிருந்தனர்.

இவர்கள் களமுனைக் கட்டளை அதிகாரிகளாக இருந்து இப்போது ஓய்வுபெற்றுவிட்டவர்கள். முன்னர், கட்டளைத் தளபதிகளாக இருந்த லெப்.ஜெனரல் டிபேந்தர் சிங்,லெப்.ஜெனரல் ஹர்கிரட் சிங் போன்றவர்கள் ஓய்வு பெற்றதும் தமது அனுபவங்களை நூல்களாகஎழுதி வெளியிட்டனர்.

இப்போது, அடுத்தநிலையில் இருந்த - போரை நேரடியாக எதிர்கொண்டவர்கள்பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.இப்போது, முதல்முறையாக காட்சி ஊடகம் ஒன்றில் பல உண்மைகளைப் போட்டுஉடைத்திருக்கிறார் இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த லெப்.ஜெனரல்ஏ.எஸ்.கல்கட்.

ஊடகவியலாளர் நிதின் கோகலேக்கு அவர், அளித்துள்ள செவ்வியில், இந்திய -இலங்கை உடன்பாடு குறைபாடுகளைக் கொண்டது என்றும், அது இலங்கையின் மீது பலவந்தமாகதிணிக்கப்பட்ட ஒன்று எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-08-08#page-25

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21