மக்களின் ஒத்துழைப்பு இல்லாது கொவிட்டை கட்டுப்படுத்த முடியாது - அமைச்சர்  ரோஹித

Published By: Gayathri

09 Aug, 2021 | 04:23 PM
image

(இராஜதுரை  ஹஷான்)

நாட்டு மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்காமல் ஒரு சிலர் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.

தற்போதைய நிலை தொடர்ந்தால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர்  ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் 19 வைரஸ் தாக்கத்தை கட்டுத்த அரசாங்கம் நெருக்கடியான நிலையிலும் பல தீர்மானங்களை எடுத்துள்ளது. தற்போதைய நிலையில் நாட்டை முடக்குவது சாத்தியமற்றது. 

நாட்டை முடக்கினால் அதன் சுமையினை அரசாங்கமும், மக்களும் எதிர்க்கொள்ள நேரிடும். இதன் காரணமாகவே சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய நாட்டை முழுமையாக திறக்க தீர்மானிக்கப்பட்டது.

 கடந்த காலங்களை காட்டிலும் தற்போது கொவிட் வைரஸ் தொற்று வேகமாக பரவலடைவதை அவதானிக்க முடிகிறது. 

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை செயற்படுத்துவதில் அரசாங்கம் ஆரம்பத்தில இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளன. 

இருப்பினும் சமூகத்தில்  பல்வேறு காரணிகளினால்   சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மீறப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த  வாரம்  தொடர்ச்சியான போராட்டங்கள் இடம் பெற்றன. 

போராட்டங்களின் கோரிக்கை  நியாயமானதாக இருந்தாலும் அதிலும் ஒரு சிலரது நோக்கம் குறுகிய அரசியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டமைந்திருந்தது.

ஆசிரியர் - அதிபர் வேதன பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியாது என அரசாங்கம் குறிப்பிடவில்லை. நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு- செலவு திட்டத்தின் ஊடாக தீர்வு வழங்கப்படும் என  உறுதியளித்துள்ளோம். 

இதற்கு பிறகும் போராட்டத்தில் ஈடுப்படுவது  எந்தநோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை  வெற்றிக்கொள்வது தற்போது பாரிய சவாலாக காணப்படுகிறது. நாட்டு  மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை வெற்றிக் கொள்ள முடியாது.  அரசியல் கட்சி பேதங்களை துறந்து அனைவரும் பொருப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51