ரஷ்ய வீதிகளில் அதிவேகமாக வாகனம் செலுத்துவதை தவிர்க்குமாறு சாரதிகளை வலியுறுத்துவதற்காக பெண்கள் சிலர் மேலாடையின்றி பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ரஷ்யாவின் நோவாயா ஸெமில்யா தீவிலுள்ள நகரமொன்றிலே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

சாரதிகள் வேகமாக வாகனங்களை செலுத்துவதால் ஏற்படும் விபத்துகளால் அதிகமான பாதசாரிகள் உயிரிழந்த நிலையில் சாரதிகளுக்கு வீதி ஒழுங்குகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த விநோத பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டடுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரசார நடவடிக்கை தொடர்பில் சாரதி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், இப்படியான செயற்பாடுகளை நான் இன்னும் அதிகமாக பார்க்க விரும்புகிறேன்.

இம் முறை நான் வேகக்கட்டுப்பாட்டு சமிக்ஞைகளைக் கண்டேன். ஏனைய சாரதிகளுக்கும் இது தொடர்பாக நான் அறிவுறுத்துவேன்” என்றார். 

ரஷ்யாவில் வீதி விபத்துகளால் வருடாந்தம் சுமார் 30,000 பேர் உயிரிழப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.