வீதி விபத்தில் சிக்கிய பிரதேச செயலக உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Published By: Digital Desk 4

09 Aug, 2021 | 02:34 PM
image

வீதி விபத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஆரையம்பதியை வசிப்பிடமாகக் கொண்ட ஜெகநாதன் காண்டீபன் (வயது 44) என்பவரே இவ்வாறு நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

வாகரைப் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் இவர் கடந்த 02.08.2021 அன்று கடமைக்காக மட்டக்களப்பிலிருந்து மோட்டார் சைக்கிளில் வாகரை பிரதேச செயலகத்திற்குச் சென்று கடமை முடிந்து அன்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் புல்லாவி எனுமிடத்தில்  வாகனமொன்றினால் மோதி படுகாயமடைந்துள்ளார்.

உடனடியாக உதவிக்கு விரைந்தவர்களால் அவர் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இவ்வாறான நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை 08.08.2021 இரவு மரணமடைந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விபத்தை ஏற்படுத்திய வாகனமும் ஏற்கெனவே கைப்பற்றப்பட்டு சாதியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வாகரைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38