சம்பள முரண்பாடு, கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக யாழில் போராட்டம் 

Published By: Digital Desk 4

09 Aug, 2021 | 12:50 PM
image

சம்பள முரண்பாடு மற்றும் கொத்தலாவல சட்டமூலத்திற்க்கு எதிராக  இன்று காலை 11 மணிக்கு யாழ். பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் கவனஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

வடமராட்சி வலய இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சங்கம் ஆகியன இணைந்து அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்கமாகவே இன்றைய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் சம்பள உயர்வை கேட்கவில்லை  எமது சம்பளத்தையே கேட்கிறோம், பிள்ளைகளின் கல்வியை சிதைக்காதே கல்வியை உறுதிப்படுத்து, ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்த்துவை, இலங்கை கல்வியை இராணுவ மயமாக்காதே, இருபத்து நான்கு வருட ஆசிரியர் அதிபர்களின் சம்பள  முரண்பாட்டுக்கு தீர்வினை வழங்கு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் இடம்பெற்றது.

முன்னதாக பருத்தித்துறை நகரிலிருந்து பேரணியாக ஆரம்பமாகிய போராட்டம் பருத்தித்துறை நவீன சந்தை சுற்று வீதியால் பஸ் தரிப்பு நிலையத்தை  வந்தடைந்து போராட்டம் நிறைவுற்றது.

இதில் வடமராட்சி வலய ஆசிரியர் அதிபர்களின் தொழிற்சங்கத்தை சேர்ந்த பதிநான்கு சங்கங்களின் பிரதிநிதிகள் என சுமார் நூறுபேர் வரை கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21