இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் சகல வீசாக்களினதும் செல்லுபடி காலம் நீடிப்பு

Published By: J.G.Stephan

09 Aug, 2021 | 11:11 AM
image

(எம்.மனோசித்ரா)
இலங்கையில் தற்போது தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொண்டுள்ள அனைத்து விதமான வீசாக்களினதும் செல்லுபடி காலம் நேற்று முதல் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் காலாவதியாகும் வீசாக்களுக்கு அக்காலப்பிரிவிற்கான வீசா கட்டணங்கள் மாத்திரம் அறவிடப்படும் என்பதோடு எந்தவித தண்டப்பணமும் அறவிடப்பட மாட்டாது என்று குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு சுற்றுலா வீசா வைத்திருப்பவர்களுக்கு வீசாவை நீடித்துக் கொள்வதற்கான வீசா கட்டணங்களை செலுத்துவதற்கும் வீசாவை மேலொப்பமிட்டுக் கொள்வதற்கும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் வெளியிட்டுள்ளது.

வதிவிட வீசாவை வைத்திருப்பவர்கள் அதன் திகதியை நீடித்துக் கொள்ள கிழமை நாட்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 070 - 7101050 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து நாளொன்றையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்வதோடு, செப்டெம்பர்  7 ஆம் திகதிக்கு முன்னர் அதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38