லேடி றிஜ்வேயில் கொவிட் தொற்றுக்குள்ளான 150 சிறுவர்கள்

Published By: Vishnu

09 Aug, 2021 | 08:38 AM
image

சுமார் 150 சிறுவர்கள் கொவிட்-19 தொற்றால் லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அவற்றுள் ஒரு சிறுவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவின் 11 படுக்கைகளில் ஆறு படுக்கைகள் கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் சிறுவர் மருத்துவர் நளின் கிதுல்வத்த கூறினார்.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, 45,000 சிறுவர்கள் கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 20,000 பேர் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

தொற்றுநோயால் 14 சிறுவர்கள் இறந்தனர். 

அறிகுறியற்ற மற்றும் இலகுவான அறிகுறிகளை கொண்ட கொவிட் -19 நோயாளிகளுக்கு வீட்டு அடிப்படையிலான தனிமைப்படுத்தல் மற்றும் மேலாண்மைக்கான வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்டது. 

எனவே சிறுவர்களுக்கு அதிக காய்ச்சல், உணவு மற்றும் பானம் உட்கொள்ள இயலாமை, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற கடுமையான அறிகுறிகளை அனுபவித்தால் மட்டுமே பெற்றோர்கள் சிறுவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

கடந்த ஜூலை 26 அன்று காலை, கொழும்பில் உள்ள லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலை கொவிட் -19 நோயாளிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வார்டு அதன் அதிகபட்ச திறனை எட்டியதாக அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35