லாப் கேஸ் நிறுவனம் எரிவாயு உற்பத்தியை மேற்கொள்ளாவிடத்து, நுகர்வோரின் வைப்புப்பணத்தை பெற்றுத்தாருங்கள்

Published By: J.G.Stephan

08 Aug, 2021 | 05:22 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)
லாப் எரிவாயு நிறுவனம் சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்காவிட்டால் நுகர்வோர் அந்த கேஸ் சிலிண்டரை பெற்றுக்கொள்வதற்கு செலுத்தப்பட்ட  வைப்பு பணத்தை மீள செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் ரன்ஜித் விதானகே வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, லாப் கேஸ் நிறுவனத்தின்  நடவடிக்கையால் நாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான  சமையல் எரிவாயு நுகர்வோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அந்த நிறுவனம் தொடர்ந்தும் சமையல் எரிவாயு உற்பத்தியை மேற்கொள்வதில்லை என்றால், நுகர்வோரினால் பணம் வைப்பிலிட்டு பெற்றுக்கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரை மீண்டும் நிறுவனத்துக்கு பெற்றுக்கொண்டு, சிலிண்டருக்காக நுகர்வோர் வைப்பிலிட்ட பணத்தை மீண்டும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு குறித்த நிறுவனத்துக்கு அறிவிக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய இக்கட்டான  நிலைமையில்  நாட்டில்  இருக்கும்  சமையல் எரிவாயு நுகர்வோருக்கு மீண்டும் பணம் வைப்பிலிட்டு, வேறு நிறுவனத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் கொள்வனவு செய்ய முடியாது என்பதை உங்களது மேலான கவனத்துக்கு கொண்டுவருகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10