ஈரானிய புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் ஜெய்சங்கர் பங்கேற்றார்

Published By: Gayathri

09 Aug, 2021 | 01:37 PM
image

தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரானிய ஜனாதிபதி இப்ராகிம் ரைசியின் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தியா சார்பில் பங்கேற்கிறார்.

ஈரான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அயதுல்லா சையத் இப்ராகிம் ரைசியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.

 

ஈரானின் மூத்த தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு நெருக்கமானவர் என்று அறியப்படும் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள் ரைசி,  கடந்த ஜூன் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேலும் இந்த விஜயத்தின் போது ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலைமைகள் உட்பட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து ஈரான் பிரதிநிதிகளுடன்  கலந்துரையாடினார். 

வளைகுடா பிராந்தியத்தில் இந்தியாவுக்கு ஈரான் ஒரு முக்கிய நாடாக இருந்து வருகிறது.

தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா இடையேயான இணைப்பை மேம்படுத்துவதில் இரு தரப்பினரும் கூட்டாக கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் இந்த சந்திப்புகள் முக்கியமானதாக அமைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52