சர்வதேச நாணய நிதியத்திற்கு பதிலாக சீனாவிடம் சென்றால் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து செயற்பட நேரிடும்: ஹர்ஷ டி சில்வா

Published By: J.G.Stephan

08 Aug, 2021 | 02:58 PM
image

(எம்.மனோசித்ரா)
சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெற்று நாட்டின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதா ? சீனாவிடம் உதவியைப் பெற்று அதன் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து பிராந்திய நெருக்கடிகளை எதிர்கொள்வதா ? என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் தமது கடனை முகாமைத்துவம் செய்ய முடியுமா என்பதை ஆராய்ந்த பின்னரே இலங்கைக்கு சீனா உதவ முன்வரும். ஆனால் இலங்கையில் அந்த நிலைமையை இல்லை என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள போதிலும் அரசாங்கம் இதுவரையில் சர்வதே நாணய நிதியத்திடம் எவ்வித கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கவில்லை. கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதியாகும் போது நாட்டில் 2.8 பில்லியன் டொலர் மாத்திரமே அந்நிய செலாவணி இருப்பு காணப்படுகிறது. தங்கத்தின் மதிப்பீட்டினை குறைக்கும் போது 2.35 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி இருப்பே எஞ்சியுள்ளது.

ஒரு மாதத்தின் இறக்குமதி செலவிற்கான இருப்பாக 1.6 பில்லியன் டொலர் மாத்திரமே உள்ளது. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் ஸ்திரமாக இருந்தால் நாட்டு மக்கள் பாரிய பொருளாதார  நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும். மக்களை பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பினை வழங்க நாம் தயாராக உள்ளோம். அரசாங்கம் அதன் தவறை உணர்ந்து செயற்பட வேண்டும். இதற்கு முன்னர் எந்தவொரு ஆட்சி காலத்திலும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படவில்லை. மக்களை மேலும் மேலும் சிக்கலுக்குள் தள்ள வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24