செவ்வாயில் பாறை துகள்களை சேகரிக்கும் முதல் முயற்சி தோல்வி

Published By: Gayathri

08 Aug, 2021 | 01:55 PM
image

நாசா கடந்த பெப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்தனவா என்பதை ஆராய்வதற்காக அங்கிருந்து பாறை மற்றும் மண் துகள்களை சேகரிக்கும் பணியில் பெர்சவரன்ஸ் ரோவர் ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில் பாறை துகள்களை சேகரிக்கும் பெர்சவரன்ஸ் ரோவரின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததாக நாசா தெரிவித்துள்ளது. 

பெர்சவரன்ஸ் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள  7 அடி நீளமுள்ள ரோபோ கையில் தரையில் துளையிடுவதற்கான கருவி மற்றும் மாதிரிகளை எடுப்பதற்கான கருவி பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் எடுக்கப்பட்ட மாதிரிகளை சேமித்து வைக்க 43 டைட்டானியம் குழாய்களும் உள்ளன. அதன்படி பெர்சவரன்ஸ் ரோவர் மாதிரிகளை சேகரிக்கும் தனது முதல் முயற்சியில் தரையில் வெற்றிகரமாக துளையிட்டது.

ஆனால் அதிலிருந்து பாறைகளை எடுத்து குழாயில் அடைத்து மூடுவதற்கான முயற்சி தோல்வியில் முடிந்தது.

பெர்சவரன்ஸ் ரோவரின் நிலைமையை மதிப்பீடு செய்வதற்கும் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08