பிராந்தியத்தின் தற்கால பாதுகாப்பு சவால்கள் குறித்து கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழு மாநாட்டில் அவதானம்

Published By: Digital Desk 3

07 Aug, 2021 | 12:39 PM
image

(எம்.மனோசித்ரா)

இந்து மா சமுத்திரத்தின் கடல் பாதுகாப்பு,  பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதம், கடத்தல்கள் மற்றும் திட்டமிட்ட குற்றங்கள், இணையக் குற்றங்கள்  உள்ளிட்ட பிராந்தியத்தில் காணப்படும் தற்கால பாதுகாப்பு சவால்களை கையாளுதல் குறித்து கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட மாநாட்டில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுவின் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான முதலாவது  மாநாடு இடம்பெற்றுள்ளது. 

இந்த  மாநாட்டிற்கு  இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியதுடன் இந்திய பிரதி பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண் மற்றும் மாலைதீவு ஜனாதிபதி அலுவலக தேசிய பாதுகாப்பு செயலாளர் ஐசாத் நூசின் வஹீத்  ஆகியோர் பங்குப்பற்றினர். மெய்நிகர் மாநாடகவே இது இடம்பெற்றது.

இதன் போது பங்களாதேஷ், மொரீஷியஸ், மற்றும் சிசெல்ஸ் ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக கலந்துகொண்டதுடன் பங்களாதேஷ் இராணுவத்தின் ஆயுத படைப்பிரிவின் முதனிலை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் வாக்கர் உஸ் ஷமன், மொரிஷீயஸ் பிரதமர் அலுவலக நிரந்தர செயலாளர் புஸ்மாவதி சோஹன். சிசெல்ஸ் மக்கள் படையின் பாதுகாப்பு படை பிரதானி கேணல் மிச்சேல் ரொசேட் ஆகியோரும் பங்குப்பற்றினர்.

இந்தியா இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் பங்கேற்றநிலையில் 2020 நவம்பரில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட மாநாட்டில் இந்து சமுத்திரத்தில் இருக்கும் இம்மூன்று நாடுகளிடையில்  கடல் மற்றும் பாதுகாப்பு சார்ந்த நெருக்கமான ஒத்துழைப்பினை ஏற்படுத்தும் நோக்குடன் கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுவை ஸ்தாபிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

கடல் பாதுகாப்பு,  பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதம், கடத்தல்கள் மற்றும் திட்டமிட்ட குற்றங்கள், இணையக் குற்றங்கள் ஆகிய  விடயங்களும் ஒத்துழைப்புக்கான நான்கு முக்கிய தூண்களாக இந்த பிரதி பாதுகாப்பு ஆலோசகர் மட்ட மாநாட்டில் அடையாளம் காணப்பட்டன.

ஒத்துழைப்புக்கான விசேட முன்மொழிவுகள், கிரமமான தொடர்பாடல், கூட்டு பயிற்சிகள், ஆளுமை விருத்தி மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டது. 

பிராந்திய ஒத்துழைப்பின் உத்வேகம் மீதான அக்கறையுடன் பிராந்தியத்தில் காணப்படும் தற்கால பாதுகாப்பு சவால்களை கையாளுதல், உறுப்புநாடுகளின் ஆளுமை மற்றும் ஆளுமை மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பு மற்றும் ஒன்றிணைவின் முக்கியத்திவம் தொடர்பாக இம்மாநாட்டின் போது வலியுறுத்தப்பட்டன.

பொதுவான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த ஒன்றிணைந்த நோக்குகளுடன் மிகவும் வரவேற்கத்தக்கவகையிலும், ஆக்கபூர்வமானதாகவும் முன்னேற்றங்களை இலக்காகக் கொண்டதாகவும் இந்த மாநாடு நடைபெற்றதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08