அதிக மரண வீதம் பதிவாகிய நாடுகளில் இலங்கை முதலிடத்தை பிடிக்கக் கூடும்  - எதிர்க்கட்சி எச்சரிக்கை  

Published By: Digital Desk 2

07 Aug, 2021 | 11:33 AM
image

எம்.மனோசித்ரா

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கொவிட் பரவல் இரண்டாம் அலையில் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததைப் போன்ற நிலைமையே தற்போது இலங்கையிலும் காணப்படுகிறது.

உலகில் அதிக மரண வீதம் பதிவாகிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பிடிக்கக் கூடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

இந்தியா மற்றும் அமெரிக்காவில் இரண்டாம் அலையில் கொவிட் மரணங்கள் அதிகரித்துச் சென்றமை தொடர்பான வரைபுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மரணங்கள் அதிகரித்துச் செல்லும் வேகம் தொடர்பான வரைபு உயர்மட்டத்தில் காணப்படுகிறது.

அதற்கமைய அவதானிக்கும் போது எதிர்வரும் வாரங்களில் உலகில் கொவிட் மரண வீதம் அதிகமாகக் காணப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடிக்கக்கூடும்.

காரணம் தற்போது பெருமளவான வைத்தியசாலைகளில் கொள்ளளவை மீறிய தொற்றாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலைமயை தடுப்பதற்கு மேலும் தாமதிக்காது நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். இதற்கு 60 பில்லியன் ரூபாய் கூட செலவாகாது. அத்தோடு நாட்டு மக்கள் அனைவரும் தாமதிக்காது பொறுப்புடன் சென்று தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01