பி.சி.ஆர், ஆன்டிஜென் சோதனைகளுக்கு கட்டுப்பாட்டு விலை

Published By: Vishnu

06 Aug, 2021 | 07:55 AM
image

பி.சி.ஆர் மற்றும் விரைவான ஆன்டிஜென் பரிசோதனைகளுக்கான கட்டுப்பாட்டு விலை அடுத்தவாரம் நிர்ணயிக்கப்படும் என்று கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர். சோதனைகள் நடத்தும் 45 வைத்தியசாலைகளும், விரைவான ஆன்டிஜென் சோதனைகள் நடத்தும் 43 வைத்தயசாலைகளும் 21 மாவட்டங்களில் நுகர்வோர் விவகார ஆணைய அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வில் கொவிட் தொற்று சோதனைகள் வேவ்வெறு விலை விகிதங்களில் முன்னெடுக்கப்படுவது தெரியவந்துள்ளது.

அதன்படி, ஒரு பி.சி.ஆர். சோதனைக்கு 5,000 - 9,500 ரூபாவுக்கு இடையிலும், ஆன்டிஜென் சோதனைக்கு 2,000 - 5,900 ரூபா வரையிலும் வசூலிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

ஆன்டிஜென் மற்றும் பி.சி.ஆர். சோதனைகள் நாட்டில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் பல்வேறு விலைகளில் நடத்தப்படுவதால், நிலைமையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு, அமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டது.

இதன்போதே மேற்கண்ட விடயம் தீர்மானம் எடுக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38