ஹிஷாலினியின் மரணத்தால் பாரிய வேதனை அடைகின்றேன் : சுயாதீன விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கவும் தயார் - ரிஷாத் 

Published By: Digital Desk 4

06 Aug, 2021 | 06:50 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ஹிஷாலினி தீமூட்டி மரணித்த சம்பவம் எனக்கும் எனது குடுத்தினருக்கும் பாரிய வேதனையை ஏற்படுத்தி இருக்கின்றது. எனது குடும்பத்தில் இவ்வாறான சம்பம் ஒன்று இடம்பெற்றால் எவ்வாறு நாங்கள் செயற்படுகின்றோமோ அதேபோன்று ஹிஷாலினியை காப்பாற்ற வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல எனது வயதுபோன மாமனாரும் மாமியாரும்  முழு மூச்சாக செயற்பட்டுள்ளனர். 

Articles Tagged Under: ரிஷாத் பதியூதீன் | Virakesari.lk

அதனால் இந்த மரணம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்படவேண்டும். அதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சுக்கு 11,843,700.000 மில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அநியாயமாக நான் 102 நாட்களாக தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றேன். அவ்வாறான சந்தர்ப்பத்தில் எனது வீட்டில் பணியாற்றிவந்த தங்கை ஹிஷாலினி தீ மூட்டி மரணித்த சம்பவம் என்னையும் எனது குடுத்தினருக்கும் பாரிய வேதனையை ஏற்படுத்தி இருக்கின்றது.

என்னுடைய சகோதரி 34 வயதில் புற்றுநோய்க்கு ஆளாகி மரணித்தபோது எவ்வாறான வேதனையும் துன்பங்களும் ஏற்பட்டதோ அதேபோன்ற வேதனை இந்த சகோரியின் மரணித்தில் எனது குடுத்துக்கு ஏற்படுத்தியது.

16 வயது பூர்த்தியான பின்னர் தான் அவர் எங்களது வீட்டுக்கு பணிக்காக ஒரு தரகர் ஊடாக வந்தார். அவர் வருகின்றபோது அவருடன் அவரது தாயாரோ வேறு யாருமோ வந்து, அவர் பணிபுரியும் வீடு தொடர்பாகவும் வீட்டில் அவர் தங்கும் அறை தொடர்பாகவோ பார்க்கவில்லை.

என்றாலும் அவர் தங்குவதற்கான அறை க்கு ஒருதனிநபர் வாழக்கூடிய சகல அடிப்படை வசதிகளையும் செய்துகொடுத்திருக்கின்றோம். அந்த அறையில்தான் கடந்த 10 வருடங்களாக அங்கு பணிபுருந்தவர்கள் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள்.

மேலும் ஹிஷாலினியின் சம்பவம் கடந்த மாதம் 3ஆம் திகதி காலை 6,45 மணிக்கு இடம்பெற்றிருக்கின்றது. அன்றைய தினம் எனது மனைவின் தந்தை மற்றும் தயார் அதிகாலை தொழுகைக்கு பின்னர் உறங்கிக்கொண்டிருக்கும்போது, ஹிஷாலியின் சத்தம் கேட்டு, அவர்கள் எழுந்து வந்து பார்த்திருக்கின்றனர். 

அப்போது அவர் தீயினால் பற்றிக்கொண்டிருந்திருக்கின்றார். உடனே 71 வயதுடைய எனது மாமனாரும் 67 வயதுடைய அவரது மனைவியும் வெளியில் இருந்த தரைப்பாகையை (காபட்) எடுத்து அவர்மீது போட்டுள்ளனர்.

நெருப்பை அணைப்பதற்காக அருகில் இருந்த தண்ணீர் தாங்கிக்குள் அவரை பாயச்செய்து முயற்சித்துன்னர். அந்த நேரத்தில் அவர் குடிப்பதற்கு தண்ணீரை கேட்டபோது அதனை கொண்டுவந்து கொடுத்துள்ளனர்.

நெருப்பை அணைப்பதற்காக 10,12 நிமிடங்கள் முயற்சித்த பின்னர், 7,03 மணிக்கு 1990 அம்பியூலன்ஸுக்கு அழைப்பு விடுத்தது தொலைபேசி பதிவில் இருக்கின்றது. 7,33மணிக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது  வைத்தியசாலையில் பதிவாகி இருக்கின்றது.

ஆனால் 8,35 மணிக்குதான் வைத்தியசாலைக்கு கொண்டுபாய் சேர்த்ததாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருப்பதாக நான் கேள்விப்பட்டேன்.

என்றாலும் எனது குடும்பத்தில் இவ்வாறான சம்பம் ஒன்று இடம்பெற்றால் எவ்வாறு நாங்கள் செயற்படுகின்றோமோ அதேபோன்று அந்த சகோதரியை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல எனது வயதுபோன மாமனாரும் மாமியாரும் முழு மூச்சாக செயற்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் எனது மனைவிக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன் அவர் உனடியாக வைத்தியசாலைக்கு சென்றிருக்கின்றார்.

அந்த சகோரியின் உயிரை பாதுகாப்பதற்காக வைத்தியர்களும் முழு முயற்சியை எடுத்திருந்தார்கள். அவர் உயிர் பிழைப்பதற்காக எனது குடும்பம் தொடர்ந்து நோன்பு நோற்று  பிராத்தனையில் ஈடுபட்டிருக்கின்றார்கள். 

அத்துடன் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தரகருக்கு தெரியப்படுத்தி, தாயாரை உடனடியாக வருவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார்கள்.

அதற்கான வாகன வசதிகளையும் செய்துகொடுப்பதாக தெரிவித்துள்ளனர். அந்த நாளில் இருந்து எனது மனைவியுடன் இணைந்து ஒவ்வொருநாளும் வைத்தியசாலைக்கு சென்று தனது மகளை காப்பாற்றி தருமாறு மன்றாடி இருக்கின்றனர்.

ஒருகட்டத்தில் வைத்தியர்கள், இவரது உயிரை பாதுகாக்க 7 தொடக்கம் 10 இலட்சம் வரை செலவாகும் என தெரிவித்திருக்கின்றனர்.

அதேபோன்று பிளாஸ்டிக் (சேர்ஜரி) சத்திரசிகிச்சை மேற்கொள்ள அதற்கு தேவையான தோல் சிங்கப்பூரில் இருந்து கொண்டுவரவேண்டும் என தெரிவிக்கப்பட்டபோது, அதற்கான செலவை வழங்குவதாக எனது மனைவி வைத்தியர்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.

அத்துடன் இந்த சம்பவம் இடம்பெற்றபோது நான் வீட்டில் இருக்கவில்லை. இந்த சகோதரி வீட்டு வேலைக்கு வந்தபொழுதும் நான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன்.

அவர் வீட்டுக்கு வந்தபோது வயதை கேட்டபோது, 17 வயது என தரகர் தெரிவித்திருக்கின்றார். ஆனால் 16 வயது என்பதை பிறப்புச்சான்றிதழ் கிடைக்கப்பெற்ற பின்னர் நாங்கள் அறிந்துகொண்டோம். அவரது தோற்றம் 17,18 வயதுடையதாக இருந்து நல்ல பண்பான பிள்ளையாகவே இருந்தார். நாங்கள் சாப்பிடுகின்ற சாப்பட்டையே கொடுத்தோம். அந்த பிள்ளையை எமது பிள்ளைபோலவே எனது மனைவி மற்றும் மாமியார் பரிமாரித்தார்கள். 

அந்த பிள்ளையின் தாயார் 3 ஆம் திகதியில் இருந்து 15 ஆம் திகதிவரை வைத்தியசாலைக்கு வந்துபோகும் சந்தர்ப்பங்களில் எல்லாம் எனது மனைவியுடன் கதைத்து, அன்றைய தினங்களில் ஊடகங்களுக்கு அறிக்கைவிட்ட தாயாரை, மரணம் நடந்த பின்னர் அரசியல் வங்குதுரோத்துள்ள ஒருசிலரும் ஊடக விபச்சாரம் செய்கின்ற ஒருசில விபச்சாரிகளும் இணைந்து அந்த தாயாரை பிழையாக வழிநடத்தி, இந்த பிள்ளையுடைய தாயையும் அவரது உறவினர்களையும் பிழையான பாதையில் வழிநடத்தி, சாப்பாடு வழங்கவில்லை. அந்த பிள்ளையை நாய் கூட்டில் போட்டார்கள் என்றெல்லாம் பொய் தகவலை சொல்லியிருப்பதை பார்த்து மிக வேதனையடைகின்றேன்.

எனது மனைவி மிக பண்புகொண்டவர், தனது பிள்ளையை போலவே அந்த பிள்ளையையும் பார்த்துவந்தார். நாங்கள் செய்த விடயங்களை சொல்லிக்காட்ட விரும்பவில்லை.

சம்பவம் இடம்பெற்ற தினத்துக்கு இரண்டு நாட்களுக்கு பிறகு தரகருக்கு அறிவித்து தனது வங்கி கணக்குக்கு 40 ஆயிரம் ரூபா அனுப்புமாறு தெரிவித்திருக்கின்றார்.

உடனே அதனை எனது மனைவி அனுப்பிவைத்திருக்கின்றார். 7 அரை மாதங்களுக்குள் 2 இலட்சம் ரூபா அனுப்பியிருந்தார். இந்த 15 நாட்களுக்குள்ளே ஒன்றரை இலட்சம் ரூபா வரை அனுப்பிவைத்திருக்கின்றார். நாங்கள் சாப்பாடுகூட வழங்கவில்லை என சொல்லும் அளவுக்கு தெரிவித்திருப்பது மனவேதனையளிக்கின்றது.

பிள்ளையின் மரணத்தினால் அந்த தாயாருக்கு வேதனை இருக்கின்றது. அந்த குடும்பத்தின் வேதனையுடன் நாங்கள் பங்குகொள்கின்றோம்.

ஆனால் அவர்களை ஒருசில ஊடகவியலாளர்கள் பிழையாக வழிநடத்துகிறார்கள்.  நான் நேற்று ஒரு எம்.பி. உடைய தொலைபேசியை பார்த்தேன், அதில் நீங்கள் மலையத்துக்கு செல்லுங்கள் ஆர்ப்பாட்டங்களை செய்யுங்கள் என ஒரு ஊடகவியலாளர் குறுஞ்செய்தியாக அனுப்புகிறார்.

எனது வீட்டிலே எந்தவிதமான அசிங்கமான விடயமும் இடம்பெறவில்லை என்பதை பொறுப்புடன் தெரிவிக்கின்றேன். அந்த பிள்ளையும் அந்த குடும்பமும் நல்லவர்கள். ஆனால் அந்த குடும்பத்தை ஒருசில ஊடக வியாபாரிகள் தங்கள் ஊடகத்துக்கு தினமும் தலைப்புச்செய்தி தேவை என்பதற்காக பிழையாக வழிநடத்தி வந்ததை பார்த்து மிகவேதனை அடைகின்றேன்.

எனவே அவரது மரணம் தொடர்பில் தூய்மையான சுதந்திரமான விசாரணை இடம்பெறவேண்டும். அவரது மரணத்துக்கு யார் காரணமோ எவ்வாறு நடந்தது என்பதை அனைத்து விசாரணை பிரிவினரும் விசாரணை மேற்கொள்கின்றார்கள்.

அந்த பிள்ளையை காப்பாற்ற உதவி செய்த எனது மாமனார், மாமி, மனைவி தரகர் சிறையில் இருக்கின்றனர். எனது மைத்துனர் இந்த சம்பவம் இடம்பெற்ற 5 நாட்களுக்கு பிறகு மதவாச்சியில் இருந்து எனது வீட்டுக்கு வந்தவர். அவரும் சிறையில் இருக்கின்றார். 

ஆனால் மரண பரிசோதனையில் மூன்று காரணங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, 72 வீதமான பகுதி எரிந்திருக்கின்றது.

கர்ப்பமடைந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் நீண்டகாலமாக நாற்பட்ட பெண் உறுப்பு ஊடுருவலுக்கான ஆதாரங்கள் பரிசோதனையில்  வெளிப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று எந்தவிதமான குற்றவியல் ரீதியிலான காயங்கள் காணப்பட்டதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை. என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயங்களை தெரிவிக்க நான் விரும்பவில்லை என்றாலும் இந்த சம்பவத்தை பயன்படுத்தி எமது நபிகளாரைக்கூட வஞ்சிக்கின்ற அளவுக்கு ஊடகங்களில் தெரிவிக்கப்படுகின்றன.

இந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு எனது குடுபம்த்தில் அனைவரும் தற்போது சிறையில் இருக்கின்றார்கள்.

எஞ்சியிருப்பது இரண்டு சிறுவர்கள். அவர்களையும் சிறையில் அடைப்பதற்காகவோ என்னவோ இன்னும் எனது வீட்டில் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.

எனவே இந்த மரணம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்படவேண்டும். அதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தராதரம் பார்க்காமல் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58