ரிஹானா 'உலகின் பணக்கார பெண் இசைக்கலைஞர்' ஆனார்

Published By: Vishnu

05 Aug, 2021 | 12:59 PM
image

பாப் நட்சத்திரம் ரிஹானாவின் நிகர மதிப்பு 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்  என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அவர் உலகின் செல்வந்த பெண் இசைக்கலைஞராக ஆனார்.

பார்படாஸில் பிறந்த நட்சத்திரம் ரிஹானா ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையால் உலகின் பணக்கார பெண் இசைக்கலைஞராக புதன்கிழமை அறிவிக்கப்பட்டார்.

எனினும் இசை தனது செல்வத்தின் முதன்மை ஆதாரமாக இல்லை என்றும் ரிஹானா சுட்டிக்காட்டியுள்ளார்.

பாப் அடையாளத்த‍ை தவிர, இன்ஸ்டாகிராமில் 101 மில்லியன் மற்றும் டுவிட்டரில் 102.5 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் தனது சமூக ஊடக முன்னிலையில் முதலீடு செய்து வரும் ரிஹானா மிகவும் வெற்றிகரமான அழகு தொழில்முனைவோரும் ஆவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right