மாத்தறை வெலிகம பெலன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாத்தறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த நபர் மீது இலக்கு வைத்தே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெலிகம பெலன பகுதியில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றை கட்டி வருகின்ற முகாமையாளர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.