மன்னார் மாவட்ட மக்களுக்கு, தமது சொந்த மாவட்டத்தில் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும்: காதர் மஸ்தான்

Published By: J.G.Stephan

05 Aug, 2021 | 10:09 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
மன்னார் மாவட்டத்திலிருந்து 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட மக்களின் வாக்குரிமையை பாதிக்கும் வகையில் தேர்தல் ஆணைக்குழு பதிவுகளை மேற்கொண்டுள்ளது. இந்த விடயத்தில் கவனம் செலுத்தி, இவர்களுக்கு தமது சொந்த மாவட்டத்தில் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டுமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் எடுக்கவுள்ளது. சிறுவர் உழைப்பை மட்டுப்படுத்தும் நோக்கில் பல தீர்மானங்களை எடுத்துள்ளோம்.ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் தடுப்பூசித் திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் 68 சதவீதமானவர்களுக்கு முதலாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் இந்த அரசாங்கம் கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் பணியை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. கொவிட் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். வடபகுதியில் இருந்து 1990ஆம் ஆண்டு பாரிய அளவான மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தமது சொந்த இடங்களில் வாக்களிக்க வேண்டுமென கோரியும் தற்போது தற்காலிகமாக தங்கியுள்ள இடங்களிலேயே அவர்கள் பதியப்பட்டுள்ளனர்.

மன்னாரில் மாத்திரம் 7,500 பேரின் வாக்குகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையகத்தின் இந்நடவடிக்கையானது, அவர்களது உரிமையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. வெளியேற்றப்பட்ட மக்களில் 70 சதவீதமான மக்கள்தான் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். மீள்குடியேற்றம் செய்ய வாக்காளர் இடாப்பில் உள்ள தகவல்கள்தான் பார்க்கப்படுகிறது. இதனால் மீள் குடியமர்த்தப்படாத மக்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஆகவே, 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட மக்களை அவர்கள் விரும்பும் அவர்களது சொந்த இடத்தில் மீள்குடியமர்த்த நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் அவர்களின் வாக்குரியை சொந்த இடத்தில் பயன்படுத்ர்வதற்கான பதிவையும் தேர்தல் ஆணைக்குழு உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04