அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற வேன் விபத்து ; 10 பேர் பலி, பலர் காயம்

Published By: Vishnu

05 Aug, 2021 | 09:34 AM
image

தெற்கு டெக்சாஸில் புதன்கிழமை சுமார் 30 பேருடன் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்ததுடன், ஏனையவர்கள் பலத்த காயமடைந்தனர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Ten people were killed and 20 were taken to area hospitals after a van crashed on Highway 281 near Encino, Texas, Wednesday, according to Texas Department of Public Safety spokesperson Sgt. Nathan Brandley.

டெக்சாஸின் என்சினோ அருகே அதிவேக நெடுஞ்சாலை - 281 இல் புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக டெக்சாஸின் பொது பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கூறினார்.

வேனில் பயணித்த பயணிகள் அனைவரும் புலம்பெயர்ந்தவர்கள் என்று ஆரம்ப கட்ட தகவல்கள் உறுதிபடுத்தியுள்ளன.

வேன் எங்கு பதிவு செய்யப்பட்டது அல்லது யாருக்கு சொந்தமானது என்பது உட்பட எந்த தகவலும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

குறித்த வேனானது வேகக் கட்டுப்பாட்டினை இழந்து, வீதியை விட்டு விலகி அருகிலிருந்த உலோகப் பயன்பாட்டு கம்பத்தில் மோதுண்டே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் உறுதிபடுத்தப்பட்ட பின்னர், அவர்களது குடும்பங்களுக்கு அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10