இலங்கை - ரஷ்யாவுக்கு இடையில் கூட்டு சுற்றுலாத் திட்டம் ஆரம்பம்

Published By: Vishnu

05 Aug, 2021 | 09:14 AM
image

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான கூட்டு சுற்றுலாத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க ரஷ்ய சுற்றுலாப் பயணிகளிடையே இலங்கையை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக ஊக்குவிப்பதை முழுமையாக ஆதரிப்பதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

தற்போது ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்றைய தினம் ரஷ்ய கூட்டமைப்பின் சுற்றுலா அமைப்பின் துணைத் தலைவர் எலெனா வி லைசென்கோவா தலைமையிலான சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

May be an image of 8 people and people standing

இதன்போதே மேற்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன், கொவிட் -19 தொற்றுநோயை எதிர்கொண்டு இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பின்பற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள் குறித்து அமைச்சர் ரஷ்ய சுற்றுலா அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தினார்.

இதற்கிடையில், ரஷ்யாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஏரோஃப்ளாட், மொஸ்கோ - கொழும்புக்கு இடையிலான நேரடி விமான சேவைகளுக்கான பயணச்சீட்டுகளின் விற்பனையை ஆரம்பித்துள்ளது. இது செப்டம்பர் 2 முதல் வாரத்திற்கு இரண்டு முறை செயல்படத் தொடங்கும்.

மறுபுறம் 2015 ஆம் ஆண்டு முதல் ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானம நிலையம் மற்றும் மொஸ்கோவின் டொமோடெடோவோ விமான நிலையம் ஆகியவற்றுக்கு இடையேயான சேவையை மீண்டும் கடந்த வாரம் ஆரம்பித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13