(சசி)

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸிலிருந்து விழுந்து நடத்துனரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி கடந்த 14 ஆம் திகதி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியில் கடமையிலீடுபட்டிருந்த நடத்துனரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார் .

மிரோடக் கட்டு என்னும் இடத்தில் பஸ்வண்டி பயணித்துக்கொண்டிருந்தபோது, பஸ் வண்டியின் மிதிபலகையில் இருந்து விழுந்தே நடத்துனர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.