சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் !வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை 

05 Aug, 2021 | 06:29 AM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளமையால் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கின்றன. 

இதனால் வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள போதிலும் , அறிகுறிகள் குறைவானவர்கள் அல்லது அறிகுறிகள் அற்ற தொற்றாளர்களை வைத்தியசாலைகள் தவிர்ந்த இரண்டாம் மட்ட சிகிச்சை நிலையங்களில் அனுமதிப்பதற்கான  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் வைத்திய சேவைகள் தொடர்பான பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் லால் பனாப்பிட்டிய தெரிவித்தார்.

எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொவிட் தொற்றாளர்கள் வைத்தியசாலை நிர்வாகத்தினால் பொறுப்பேற்கப்படாமல் கைவிடப்படவில்லை. 

கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 9 அறைகளும் , றாகமை வைத்தியசாலையில் 13 அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய நிபுணர் லால் பனாப்பிட்டிய தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

றாகமை வைத்தியசாலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள காணொளியில் காண்பிக்கப்பட்டுள்ள பகுதி நோயாளர்களை ஆரம்பகட்டத்தில் அனுமதிக்கும் அறை ஆகும். 

இதே நிலைமையே ஏனைய பகுதிகளிலும் காணப்படுகிறது என்ற பொதுவான முடிவுக்கு வர முடியாது.

சடுதியாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையின் காரணமாகவே வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கான படுக்கைகளில் பற்றாக்குறை ஏற்பட்டது. 

எவ்வாறிருப்பினும் நோயளர்கள் வைத்தியசாலைகளுக்கு வரும் போது அவர்களின் நிலைமைகள் அல்லது தேவைகளின் அடிப்படையிலேயே வெவ்வேறு பிரிவுகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

எவ்வாறிருப்பினும் சடலங்களுடன் நோயாளர்கள் எந்த பகுதியிலும் வைக்கப்படவில்லை. 

அந்தளவிற்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களில் ஒட்சிசன் தேவையுடையவர்கள் அங்கேயே அனுமதிக்கப்படுகிறார்கள். 

அறிகுறிகள் குறைவானவர்கள் அல்லது அறிகுறிகள் அற்ற தொற்றாளர்கள் தேவையேற்படின் வைத்தியசாலைகள் தவிர்ந்த இரண்டாம் மட்ட சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்படுகின்றனர்.

றாகமை வைத்தியசாலையில் சீதுவ பிரன்டிக்ஸ் எனப்படும் சிகிச்சை நிலையம் இராணுவத்தினரால் இவ்வாறு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொவிட் தொற்றாளர்கள் வைத்தியசாலை நிர்வாகத்தினால் பொறுப்பேற்கப்படாமல் கைவிடப்படவில்லை.

தேசிய வைத்தியசாலையில் மாத்திரம் 9 அறைகள் கொவிட் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 

றாகமை வைத்தியசாலையில் 13 அறைகள் கொவிட் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வசதிகளே இவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58