விழுந்துள்ள பலம் பொருந்திய கட்சி எழுந்து ஆட்சியை கைப்பற்றும் - மைத்திரி உறுதி 

Published By: Digital Desk 4

05 Aug, 2021 | 06:04 AM
image

(இராஜதுரை ஹஷான்)

 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உரிய நேரத்தில் தனித்து போட்டியிட்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நிலையான தேசிய கொள்கையொன்றை உருவாக்க வேண்டும் - மைத்திரி | Virakesari.lk

 

புத்தளம் மாவட்டத்தில் இடம் பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பூமியில் விழுந்துள்ள பலம் பொருந்திய கட்சி  விரைவில் எழும். உரிய நேரத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர  கட்சி உரிய நேரத்தில் தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும்.

 இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் ஆகிய காலப்பகுதியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து  ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற புதிய கூட்டணியை உருவாக்கினோம்.

கூட்டணியில் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் இன்று வரை செயற்படுத்தப்படவில்லை.

 

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின்  ஆட்சிமாற்றம் ஏற்படும் போது மாற்றமடையாத உறுதியான அரசியல் கொள்கை வகுக்கப்பட வேண்டும். 

நீண்டகால பொருளாதார கொள்கையினை வகுப்பது குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக பூகோள மட்டத்தில்  ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து  மீள்வதற்கு புதிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02