ஆசியர்களுக்கு மாத்திரம் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டால் பாரிய சிக்கல் ஏற்படும் - ஜீ.எல்.பீரிஸ் கேள்வி

Published By: Digital Desk 3

04 Aug, 2021 | 03:55 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை உடனடியாக நீக்குவதற்கு தற்போது முடியாது. அவ்வாறு ஆசியர்களுக்கு மாத்திரம் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டால் ஒட்டுமொத்த அரச துறையிலும் பாரிய சிக்கல் ஏற்படும்.  அதனால்தான் வரவு செலவு திட்டத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக தெரிவித்திருக்கின்றோம். 

3 மாதங்களில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது. என்றாலும் ஆசிரியர்கள் 3 மாதங்களுக்கு பொறுத்திருக்க முடியாது இன்று மாணவர்களது கல்வியை பணயமாக வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் கொவிட் தொடர்பான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரே அதிபர் ஆசிரியர்களை பாடசாலைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றோம் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேதாசவினால் கேட்கப்பட்ட அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு, கொவிட் வேகமாக பரவும் அபாயம் இருக்கும் நிலையில் அவர்களை பாடசாலைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருப்பது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொழும்பு மாவட்டத்தில் 98 வீதமான ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த மாதம் இறுதியாகும்போது ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் வழங்கி பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.

மேலும் இணையவழி கற்பித்தலை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு சிறந்த இடம் பாடசாலைகளாகும். அதனால்தான் அதிபர், ஆசிரியர்களை பாடசாலைக்கு வருமாறு அறிவிப்பு செய்தோம் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58