சுதந்திர கல்விக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்தில் திருத்தம்: அரசாங்கம் உறுதி

Published By: J.G.Stephan

03 Aug, 2021 | 05:15 PM
image

(எம்.மனோசித்ரா)
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் சகல தரப்பினராலும் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கும் அரசாங்கம் முக்கியத்துவமளிக்கும். அதற்கமைய இலங்கையின் சுதந்திர கல்விக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், திங்களன்று நடைபெற்ற பாராளுமன்ற குழு கூட்டத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது. 2007 ஆம் ஆண்டு கொத்தாவல பாதுகாப்பு கல்லூரி பல்கலைக்கழகமாக்கப்பட்டது.

அதன் பின்னர் உருவாக்கப்பட்ட சட்ட மூலத்தில் திருத்தங்களை மேற்கொண்டு புதிய விடயங்கள் உள்ளிட்ட அதனை சமர்பிப்பதே இதன் இலக்காகும். இது தொடர்பில் முன்வைக்கப்படும் சகல கருத்துக்கள் தொடர்பிலும் ஜனநாயக ரீதியிலான அரசாங்கம் என்ற ரீதியில் கவனம் செலுத்தப்படும்.

அவற்றை கவனத்தில் கொண்டு செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் காணப்படுமாயின் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்பதோடு அவை இலங்கையின் சுதந்திர கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் செய்யப்படும் என்பதை அரசாங்கம் என்ற ரீதியில் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47