உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம்: குற்றவாளிகள் தப்பித்துவிட கூடாது என்பதில் அதீத அவதானம் செலுத்தப்படுகிறது

Published By: J.G.Stephan

03 Aug, 2021 | 04:14 PM
image

(எம்.மனோசித்ரா)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கு சிக்கலுடையது என்பதால் ஏதேனுமொரு இடத்தில் தவறிழைக்கப்பட்டாலும் , சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தப்பிவிடக்கூடும். எனவே இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியுள்ளதால் சிறிது காலம் செல்லும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளதாக  அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.  

அவர் மேலும் கூறுகையில், பேராயரால் உயிரித்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்படவில்லை. எனினும் இவ்விடயம் தொடர்பிலான உள்ளக விடயங்கள் பல குறித்து பேசப்பட்டது.

இதன் போது சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சு உள்ளிட்ட இந்த விவகாரம் தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிறுவனங்கள் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி சுயாதீனமாக செயற்பட வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் பிரதானமாக பேசப்பட்டது.

எனினும் இந்த வழக்கு மிகவும் சிக்கலானது என்பதால் , ஏதேனும் ஒரு இடத்தில் தவறிழைக்கப்பட்டாலும் , சம்பவத்துடன் தொடர்புடையோர் தப்பிவிடக் கூடும் என்பதை சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியுள்ளதால் சிறிது காலம் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11